கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல்

ஞாயிற்றுக்கிழமை கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியத் தலைவர் திரு. எடிசன் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 10 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கடுக்க்பட்டது . தொடர்ந்த அரங்க நிகழ்வுகள் காலை11.30 மணியளவில் மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி கலைநிகழ்வுகளுடன் கருத்துப் பகிர்வுகளும் இடம் பெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள பாடசலைகளில் கல்வி கற்பிக்கும் நூற்றுக்கும் அதிகமான கத்தோலிக்க ஆசிரியர்கள், குருக்கள், அருட்சகோதரிகளென பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் மறைக்கல்வி நடுநிலையத்தின் ஏற்பாட்டில், இயக்குநர் அருட்திரு பெனற் அடிகளாரின் நெறியாள்கையில் சிறப்பான முறையில் நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Comments are closed.