யாழ் மறைமாவட்டத்தின்  ஆயர்  அருட்கலாநிதி மேதகு யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளாரின்; வாழ்க்கைக் குறிப்பு

யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மேதகு யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம்; அடிகளார் யாழ் மறைமாவட்டத்தின் 8வது ஆயராக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரான்சீஸ் பாப்பரசரால் ஒக்ரோபர் மாதம் 13ஆம் திகதி 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்
யாழ் மறைமாவட்ட ஆயராக 1992ஆம் ஆண்டு முதல் 2015 வரை 23 ஆண்டுகள் பணியாற்றிய மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை திருச்சபைச் சட்டப்படி தனது 75வது வயதில் 2013ஆம் ஆண்டுதன் பணிஓய்வு விண்ணப்பத்தை உரோமாபுரிக்கு அனுப்பிவைத்தார். மேற்படி விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பிரான்சீஸ் பாப்பரசர் யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம்; அடிகளாரை நியமித்தார்.
அருள் மேதகு யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம்; அடிகளார் 2007ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுயாழ் ஆயர் நியமனத்தைப் பெறும் வரை 8 ஆண்டுகள் யாழ் மறைமாவட்டத்தின் குரு முதல்வராகப் பணியாற்றியவர். 2008 – 2015 காலப் பகுதியில் குருமுதல்வர்ப் பணியோடு கத்தோலிக்க அச்சக அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
குருத்துவப்பணியில் 40 ஆண்டுகளை 2014ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ள மேதகு யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம்; அடிகளார் தனது பணிக்காலத்தின்; 31ஆண்டுகளை கல்விப்பணியிலே -குறிப்பாக இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியிலும் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் – ஆற்றி 2001ஆம் ஆண்டு கல்விப்பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தவர்.
1976ஆம் ஆண்டுமுதல் 1989ஆம் ஆண்டுவரை இளவாலை புனிதகென்றி அரசர் கல்லுரியின் உப அதிபராகவும் 1989 முதல் 2002 வரைஅதன் அதிபராகவும் பணியாற்றிய இவர் அரசபாடசாலையில் இருந்துதனியார் பாடசாலைக்கு பணிமாற்றம் பெற்று2002 முதல் 2007வரை புனித பத்திரிசியார் கல்லுரியில் அதிபராகப்; பணியாற்றியவர்.
இங்கிலாந்தில் 1986 ஆண்டுமுதல் 1988 வரை கலாநிதிப் பட்டத்தையும் 1979 ஆண்டு முதல் 1980வரைமுதுகலைமாணிப் பட்டத்தையும் இங்கிலாந்திலேயே பெற்ற இவர் 1991ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு 1 தரத்தைப் பெற்று 1990 – 1994 ஆண்டுகாலப்பகுதியில் இளவாலையில் 12 அரச பாடசாலைகளின் கொத்தணி அதிபராக பணியாற்றியவர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 1998 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை பணியாற்றிய இவர் 1982 முதல் 1984 வரையாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். 2003ஆம் ஆண்டுமுதல் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒழுங்காற்றுச் சபைத்தலைவராகவும் – 2002 ஆம் ஆண்டுமுதல் யாழ் பல்கலைக்கழக கலாநிதி மற்றும் முதுகலைமாணிப் பட்டமதிப் பீட்டாளராகவும் பரீட்சையாளராகவும் இன்றுவரை பணியாற்றி வருகிறார். கோப்பாய் கல்வியியல் கல்லூரியின் ஆலோசனைசபை உறுப்பினராக 2003ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பணியாற்றி வருகிறார்.
1994ஆம் ஆண்டுமுதல் 2002ஆம் ஆண்டுவரை இளவாலை மறைக்கோட்டத்தின் 12 பங்குகளின் முதல்வராகப் பணியாற்றிய இவர் அதேகாலப் பகுதியில் யாழ் மறைமாவட்ட ஆயரின் பேரவை அங்கத்தவராகப் பணியாற்றிபின்னர் அதேபணியை 2007ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை ஆற்றியவர்.
யாழ் மறைமாவட்டகல்வி ஆணைக்குழவின் தலைவராக 1992 – 2002 ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றிய இவர் 1992 முதல் 2006 வரைபுனிதசவேரியார் குருத்தவக் கல்லூரி மெய்யியற்துறையில் கல்வியியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். யாழ் மறைமாவட்ட கிறிஸ்தவ சமயங்களுக்கிடையிலான ஒன்றிப்பு ஆணைக்குழவின் தலைவராக 1981 – 1986 ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றிய இவர் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி இறையியற்துறையில் 1984 – 1986 ஆண்டு காலப்பகுதியில் கிறிஸ்தவ சமயங்களுக்கிடையிலான ஒன்றிப்பு விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1999ஆம் ஆண்டு குருத்துவ வெள்ளிவிழாவைக் கொண்டாடியவர்.
1974ஆம் ஆண்டுயாழ் புனித அடைக்கலஅன்னை (ஓ.எல்.ஆர்) ஆலயத்தில் மறைந்தயாழ் ஆயர் மேதகு தியோகுப்பிள்ளை ஆண்டகையால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர் 1980 – 1985 ஆண்டு காலப்பகுதியில் மாரீசன்கூடல் பங்குத்தந்தையாகவும் 1976 – 1979 ஆண்டு காலப்பகுதியில் இளவாலை புனித அன்னாள் ஆலய உதவிப் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியவர். 1975 – 1976 ஆண்டு காலப்பகுதியில் உருத்திரபுரம் பணித்தளத்தில் பணியாற்றிய இவர் அன்று லோங் தொழில் நுட்பநிறுவனம் என அழைக்கப்பட்டமாணவர் இல்லத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். இவரின் முதல் குருத்துவப் பணிநியமனம் 1974 – 1974 ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி- வலைப்பாடு ஆகியபங்குகளில் அமைந்திருந்தது.
இவர் தனது இறையியல்;; கல்வியை 1972 – 1974 ஆண்டுகாலப்பகுதியில் இந்தியா புனே பாப்பிறைகுருத்துவக் கல்லுரியில் கற்று இறையியல்; இளங்கலைமாணிப் பட்டத்தைபெற்றவர். இவர் தனது மெய்யியல் கல்வியை1966 – 1969 ஆண்டு காலப்பகுதியில் கண்டி தேசிய குருத்துவக் கல்லுரியிலும் ஆரம்ப கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லுரியிலும் பெற்றவர்.
1948ஆம் ஆண்டு ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயப்பங்கில் பிறந்த மேதகு யஸ் ரீன் பேணாட் ஞானப்பிரகாசம்; அடிகளார் 2015ஆம் ஆண்டு 8வது ஆயராக பொறுப்பேற்கிறார்
மேதகுதோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை 1938 ஆம் ஆண்டு ஊர்காவற்துறையில் பிறந்த 1963 ஆம் ஆண்டு 25 ஆவதுவயதில் தாழ்மையோடு ஊழியம் புரிய என்றவிருது வாக்கோடு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு – 1981 ஆம் ஆண்டு தமது 43 வயதில் அனைத்தும் நற்செய்திக்காகவே (1கொரிந்தியர் 9:23) என்ற விருதுவாக்குடன் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டு – மன்னார் மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக (1981 – 1992) 11 ஆண்டுகளும் – யாழ் மறைமாவட்டத்தின் 7ஆவது ஆயராக (1992 – 2015) 23 ஆண்டுகளுமாக மொத்தமாக 34 வருடங்கள் ஆயர்ப்பணிபுரிந்து 2015 ஆம் ஆண்டு தமது 77ஆவது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்

 

Comments are closed.