நடிகர்களாக அல்ல, உண்மை சாட்சிகளாக வாழ்வோம்
சாட்சிகளாக வாழ்வதை விடுத்து, வெறும் நடிகர்களாக மாறிப்போகும் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம். நாம் இறைவனின் உயிருள்ள நினைவு’ என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சனிக்கிழமையன்று காலை, சிலே நாட்டு அரசுத் தலைவர் Sebastián Piñera Echenique அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தன் பயணத்தை, இவ்வெள்ளியன்று துவக்கிய சிலே அரசுத் தலைவர் Piñera அவர்கள், சனிக்கிழமையன்று காலையில் திருத்தந்தையை சந்தித்தார்.
இதே நாளில், இத்தாலியின் லொம்பார்தியா பகுதியிலிருந்து வந்திருந்த குருத்துவ மாணவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
14 ஆயர்கள், 128 அருள்பணியாளர்கள், 35 தியோக்கியோன்கள், 307 குருத்துவ மாணவர்கள், 8 துறவறத்தார், 28 பொதுநிலையினர் என 520 பேர் கொண்ட குழுவை சந்தித்து திருத்தந்தை உரையாற்றினார்.
இச்சனிக்கிழமையன்று காலை இக்குழுவிற்கு, வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஒன்றும் வழங்கினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
Comments are closed.