இளையோருக்கும் முதியோருக்கும் இடையே கலந்துரையாடல்

வத்திக்கானில் நடைபெற்றுவரும் 15வது உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, இம்மாதம் 23ம் தேதி மாலையில், ‘காலத்தின் ஞானம்’ என்ற தலைப்பில் இளையோருக்கும் முதியோருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.
வருங்காலத்தை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில், கடந்த காலம் இன்றியமையாதது, நம் கடந்த கடந்த கால நினைவுகளும், துணிவும், தன்னம்பிக்கையும் தேவை என்பதால், இரு தலைமுறைகளுக்கும் இடையே உருவாகவேண்டிய உரையாடல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளுக்கு இயைந்த வகையில், இந்த உரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து வருகைதரும் இளையோர், மற்றும், முதியோர் பிரதிநிதிகள், திருத்தந்தையுடன் மேற்கொள்ளும் இந்த கலந்துரையாடலை, பானமா பேராயர் Jose Domingo Ulloa Mendieta அவர்களும், La Civilta Catolica இதழின் இயக்குனர், இயேசு சபை அருள்பணி Antonio Spadaro அவர்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
2019ம் ஆண்டு சனவரி மாதம், பானமாவில் இடம்பெறவுள்ள உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின் தயாரிப்பு வேலைகளை ஒருங்கிணைப்பவர், பேராயர் Mendieta என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.