சர்வேசுரா சுவாமி

உம்முடைய திவ்விய குமாரனும் எங்கள் பரம குருவுமாய் இருக்கிற இயேசுநாதர், அடியோர்கள் செய்த பாவங்களின் பரிகாரமாக உமக்குச் செலுத்துகிற பரிசுத்த பலியை உம்முடைய தேவாலயத்தில் நின்றும், தேவரீர் பரமண்டலங்களில் வீற்றிருக்கிற உன்னத ஸ்தலத்திலே நின்றும் பார்த்து, எங்கள் எண்ணிறந்த குற்றங்களைப் பொறுத்தருளும். சிலுவையினின்று எங்கள் திவ்விய இரட்சகரும், மனு உருவான நாங்கள் சகோதரருமாகிய இயேசுவினுடைய திரு இரத்தத்தின் சப்தம் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றது. நாங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். சுவாமி.

உம்முடைய கோபத்தை அமர்த்தியருளும். எங்கள்மேல் உம்முடைய கிருபாகடாட்சம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே! அதிக தாமதம் செய்யாதேயும், இவ்வூரின் மேலும் இம்மக்கள் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு உம்முடைய திருநாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திரமாய்த் தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

ஆமென்.

Comments are closed.