இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற, இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற, இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியில் பங்குகொண்ட இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 6.10.2018 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் தலைமைத்து பயிற்சியை நிறைவு செய்யத இளையோர் தங்களின் தலைமைத்துவ பண்புகளை முதலில் தங்களின் குடும்பங்களில் வாழ்ந்து குடும்ப வாழ்வை வழப்படுத்தி சமூகத்தில் நல் பிரஜைகளாக திகழ வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் ஆசிஉரையில், எம் இனத்தின் வரலாற்றில், தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் இப்புள்ளியில், இளமைப்பராயத்தில் வாழும் இளையோர் கலத்தின் தேவை உணர்ந்து தலைமைத்துவ பண்பில் தம்மை வலுப்படுத்தி தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப முனைய வேண்டும் என்பதனை குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த இளையோர் பல கலை நிகழ்வுகளை நிகழ்த்தினர். இதில் 65 ற்கும் அதிகமான இறையோரும் பயிற்சிகொடுத்த வளவாளர்கள், குருக்கள் பெரியோர்கள் என 80 ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை பயிற்சியை நிறைவு செய்த இளையோரே ஒழுங்குபடுத்தி நடாத்தினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் பயிற்சியை நிறைவுசெய்த இளையோருக்கான சான்றிதழ்களை பிரதம விருந்தினர் வழங்கி கெளரவித்தார்.
Comments are closed.