புனித சவேரியார் பெரிய குருமட 2018 | 2019 கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் பெரிய குருமட 2018 | 2019 கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வுகள் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் 1.9.2018 அன்று நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியின் கொடியேற்றப்பட்டு யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் குருமடத்தின் விரிவுரையாளர்கள் தங்களின் வாக்குறுதிகளை புதுப்பித்துக் கொண்டார்கள். திருப்பலியைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் அருட்திரு கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. 2017 / 2018 ஆம் கல்வியாண்டில் சிறந்த புள்ளிகளை பெற்றுக்கொண்ட அரட்சகோதரர்களுக்கான பரிசில் வழங்கள் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து அன்றைய நாளுக்கான சிற்றுரை கல்லூரியின் விரிவுரையாளர் அருட்திரு ஜெகன் கூஞ்ஞோ (அமதி) அவர்களால் ‘விசுவாசம்’ என்ற தொனிப்பொருளில் மிகவும் சிறப்பான முறையில் ஆற்றப்பட்டது. இந்நிகழ்வில் குருக்கள், துறவியர், அருட்சகோதார்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வுகள் யாவும் கல்லூரி அதிபர் அருட்திரு கிருபாகரன் அவர்களால் சிறப்பான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.