திருத்தூதரான யோசேவ்வாஸ் பயன்படுத்திய அற்புத சிலுவைப் பவனி யாழ்.மறைமாவட்டத்தில்

இலங்கையின் திருத்தூதரான புனித யோசப்வாஸ் பயன்படுத்திய அற்புதச்சிலுவை யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்படுகின்ற இந்தச் சிலுவை ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை யாழ்ப்பாணம் மறைமவட்டத்தில் மறைக்கோட்ட ரீதியாக பல்வேறு பங்குகளுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளை யாழ். மறைமாவட்ட புனித யோசப்வாஸ் குழு மேற்கொண்டுள்ளது. ஐந்து நாட்கள் மட்டும் இச்சிலுவை யாழ். மறைமாவட்டத்தில் இருப்பதால் எல்லாப் பங்குகளுக்கும் இதனை எடுத்துச் செல்லமுடியாத நிலையில் மறைக்கோட்டங்களில் சில குறிப்பட்ட ஆலயங்களில் மட்டும் இச்சிலுவை தரித்துவைக்கப்பட்டு திருப்பலிகளும், ஆராதனைகளும் நடைபெறுமென யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு பி.ஜே. ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளாதோடு பங்குத்தந்தையர்கள், பாடசாலை அதிபர்கள் தமது பங்குமக்கள், மாணவர்கள் புனித யோசப்வாஸின் அற்புதச் சிலுவையைத் தரிசிப்பதற்கான பொருத்தமான இடங்களைத் தெரிவுசெய்து அவர்கள் புனிதரின் ஆசீரைப் பெற ஆவன செய்யும்படியும் கேட்டுள்ளார்.

Comments are closed.