இந்தோனேசியா சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு செபம்
இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதியில், நிலநடுக்கம், மற்றும், சுனாமியால் உயிரிழந்தவர்கள், மற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் செப உறுதியை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மிகப்பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துள்ள இம்மக்களுக்காக தான் செபித்ததாகவும், காயமுற்றோர், வீடுகளையும் வேலைகளையும் இழந்தோர் என அனைவரையும் தன் செபத்தில் நினைவுகூர்ந்ததாகவும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு இறைவன் ஆறுதலை வழங்குவதோடு, இம்மக்களுக்கு உதவ முன்வந்திருப்போருக்கு ஊக்கத்தையும் வழங்குவாராக என வேண்டினார்.
இந்நோக்கங்களுக்காக அன்னை மரியின் பரிந்துரையை வேண்டி, ‘அருள் நிறை மரியே’ என்ற செபத்தை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த அனைவருடனும் இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தோனேசியாவின், மத்திய மாநிலமான சுலவேசியில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும், சுனாமியால், இதுவரை, குறைந்தது, 832 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எண்ணற்றோர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அப்பகுதியின் மனாடோ மறைமாவட்டம், குழு ஒன்றை அமைத்து, நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
Comments are closed.