இறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு
இறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு, செப்டம்பர் 26, இப்புதன் முதல், 28, இவ்வெள்ளி முடிய, மலேசியா நாட்டின் பினாங் உயர் மறைமாவட்டத்தில் நடைபெறுகிறது.
இறை இரக்கத்தின் ஆசிய மாநாடு, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு பணியின் ஒரு வெளிப்பாடாக அமைந்துள்ளது என்று, இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் ஆசிய பிரதிநிதி, ஆயர் ருப்பெர்த்தோ சாந்தோஸ் அவர்கள் கூறினார்.
ஆசியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பணிபுரிய செல்லும் கத்தோலிக்கர்கள், இறை இரக்கத்தின் பக்தியை தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்பி வருவதால், இவர்கள் நற்செய்தியை, புதிய வழிகளில் அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆயர் சாந்தோஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் வழிநடத்துதலோடு, இறை இரக்கத்தின் உலக மாநாட்டு அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசியாவின் பல்வேறு நாடுகளில், ஆசிய மாநாட்டை நடத்தி வருகின்றது.
2015ம் ஆண்டு, இந்தோனேசியாவின் மெதான் நகரில் நடைபெற்ற ஆசிய மாநாட்டிற்கு அடுத்து, இவ்வாண்டு, மலேசியாவின் பினாங் உயர் மறைமாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. (UCAN)
Comments are closed.