பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமேன்
எங்கள் வாழ்வை புனிதப்படுத்துகிற இறைவா நாங்கள் ஒவ்வொருவரும் புனிதர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எங்கள் வாழ்வில் உணர செய்கின்றீரே, எங்கள் வாழ்கையில் அதை ஆசீர்வாதமாய் கொடுக்கிறவரே நன்றி செலுத்துகிறோம்.
எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறவராய், அன்பு செய்கிறவராய், வழிநடத்துகிறவராய், பாதுகாக்கிறவராய், பரிசுத்தப்படுத்துகிறவராய் எங்களோடு தங்கி இருந்து நன்மையான காரியங்களை, ஆசீர்வாதமான காரியங்களை, எங்கள் வாழ்கையில் அனுமதித்தவரே, எங்கள் குடும்பங்களில் அனுமதித்தவரே, எங்களை உற்சாகப்படுத்துகிறவரே ,எக்களை ஊக்கப்படுத்தினவரே நன்றி செலுத்துகிறோம்.
இந்த நாள் முழுவதும் உம்முடைய கருணையினால் எங்களை பாதுகாத்து உம்முடைய இரக்க மிகுதியினால் எங்களை மீட்டு உம்முடைய அதிகப்படியான ஆசீர்வாதத்தை கொடுத்து நன்மைகள் நிறைய காண செய்தீரே நன்றி செலுத்துகிறோம்.
உம்முடைய பேரன்பு, பேரிரக்கம், எங்களை இந்த நாள் முழுவதும் சூழ்ந்திருந்து வழி நடத்தியதற்காய் நன்றி செலுத்துகிறோம், எங்களை ஒப்புக்கொடுக்கிறோம் ,எங்களை தாழ்த்துகிறோம், ஆசீர்வதியுங்க.
சமாதானமும்,சந்தோசமும், எங்கள் வாழ்க்கையில் அதிகமாய் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி தெய்வம் பரிந்து பேசுங்க, நன்மைதனங்களை, ஆசீர்வாதங்களை வல்லமைகளை இந்த இரவில் நாங்கள் காண எங்களுக்கு உதவி செய்யுங்க.
எங்களுடைய கஸ்ரங்கள், கவலைகள், வேதனைகள், எல்லாம் மறைய இந்த
இரவிலே தெய்வம் எங்களோடு பேசுவீராக, கனவின் வழியாய் எங்களோடு பேசுவீராக,
தரிசனம் வழியாய் எங்களோடு பேசுவீராக,
நாங்கள் உம்மோடு எப்படி இனைந்திருக்க வேண்டும், என்னன்ன வழியிலே இனைந்திருக்க வேண்டும் , எதை எல்லாம் நாங்கள் தியாகம் செய்ய வேண்டும் , என்று எங்களுக்கு தெய்வம் எங்களுக்கு கற்றுக்கொடுப்பீராக எங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறோம் ஆசீர்வதியுங்க.
நல்ல உறக்கத்தினால், ஆசீர்வாதமான கனவுகளினால், எங்கள் வாழ்வை திடப்படுத்துங்க, எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளுங்க, நாங்கள் ஒரு போதும் உம்மை விட்டு பிரியாமல் உம்மோடு இனைந்திருக்க எங்களை, எங்கள் குடும்பங்களை பாதுகாத்து கொள்ளுங்க புனிதர்கள், மறைசாட்சிகள் எங்களுக்காய் பரிந்து பேசுங்க எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதித்து காப்பாற்றுவாராக ஆமேன்
Comments are closed.