கிறீஸ்தவன் அனுசரிக்க வேண்டிய வேத கற்பனைகள் எதிலே அடங்கியிருக்கின்றன?

பத்துக் கற்பனை மந்திரத்திலும், திருச்சபையின் கட்டளை மந்திரத்திலும் சுருக்கமாய் அடங்கியிருக்கின்றன.

1. பத்துக் கற்பனை என்றால் என்ன?

இரண்டு கற்பலகைகளிலே எழுதப்பட்டு, மோயீசனுக்குச் சர்வேசுரனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளாம்.

2. திருச்சபைக் கட்டளை என்றால் என்ன?

திருச்சபையால் ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளாம்.

தேவ வரப்பிரசாதத்தின் வழிமுறைகள்

8. கிறீஸ்தவன் தேவ கிருபை அடைவதற்கு உபயோகிக்க வேண்டிய வழிமுறைகள் எவை?

தேவ திரவிய அனுமானங்களைப் பெறுதல், செபம் செய்தல் முதலிய வேத அனுசாரங்களேயாம்.

1. தேவதிரவிய அனுமானம் என்றால் என்ன?

தேவ வரப்பிரசாதத்தை நமக்குக் குறித்துக் காட்டவும், அதை அளிக்கவும் சேசுநாதர் சுவாமியே ஏற்படுத்தியதுமான வெளி அடையாளமாம்.

2. ஜெபம் என்பது எது?

நமது இருதயத்திலுள்ள ஆசைகளைச் சர்வேசுரனுக்குச் சொல்லிக் காட்டும்படி அவரோடுகூட நாம் செய்யும் உரையாடலாகும்.

3. வேத அனுசரிப்பு என்றால் என்ன?

ஞானக் காரியங்களை நடைமுறையில் அனுசரிப்பதாம். உதாரணமாக : தவம், தர்மம் முதலிய வேத ஊழியக் கிரியைகளை அனுசரிப்பது.

9. இந்த வேத விஷயங்களை அறிவதற்குச் செய்ய வேண்டியதென்ன?

கத்தோலிக்க திருச்சபையின் ஞானோபதேசத்தைப் படித்தறிய வேண்டியது.

1. ஞான உபதேசத்தைப் படித்து அறிவது பிரதான காரியமா?

சகல சாஸ்திரங்களிலும் ஞான சாஸ்திரமாகிற ஞான உபதேசம், மெய்யாகவே முக்கியமான சாஸ்திரம். ஏனெனில், ஞான உபதேசம் நாம் எதை விசுவசிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும் என்பதைக் கற்பித்து மோட்சத்துக்குப் போகும் வழியைக் காட்டுகிறது.

2. ஞான உபதேசத்தில் எத்தனை பாகம் உண்டு?

மூன்று பாகம் உண்டு. அவைகளாவன :

1- வது — நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்களின் விளக்கம் என்னும் முதல் பாகம்.

2- வது — நாம் அனுசரிக்க வேண்டிய பத்துக் கற்பனை, திருச்சபை கட்டளைகள், பாவம், புண்ணியம், பேறுபலன் ஆகிய இவைகளின் விவரம் என்னும் இரண்டாம் பாகம்.

3-வது — நாம் அர்ச்சிக்கப்படுவதற்குரிய வழிமுறை களாகிய செபம், தேவதிரவிய அனுமானம் முதலிய வேத அனுசரிப்புகளின் விளக்கம் என்னும் மூன்றாம் பாகம்.

Comments are closed.