புனித மரியன்னை பேராலயத்தில் மறைக்கல்வி விழா

தேசிய மறைக்கல்வி வாரத்தினை முன்னிட்டு யாழ்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கான நற்கருணை வழிபாடு, மறைக்கல்வி போட்டிகள், சிரமதானம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் இறுதி நாள் நிகழ்வாக 16.09.2018 ஞாயிற்றுகிழமை, கலைநிகழ்வுகளுடனான மறைக்கல்வி விழா பேராலய பங்குத்தந்தை R.C.X.நேசறாஜா அடிகளார் தலமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மறைக்கல்வி நடுநிலையான இயக்குனர் அருட்பணி பென்ற் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு பல்வேறு போட்டிகளிலே தேசிய ரீதியிலும், மறைமாவட்ட ரீதியிலும், பங்கு ரீதியிலும் பங்குபற்றி பல்வேறு சாதனைகளைப்புரிந்த மறை ஆசிரியர்களும் மறைக்கல்வி மாணவர்களும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படடார்கள்

Comments are closed.