உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஆசியாவிலிருந்து 71

இளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், ஆசியாவிலிருந்து 71 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஈராக்கின் கர்தினால் லூயில் இரஃபேல் சாக்கோ, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ, பாப்புவா நியு கினி கர்தினால் ஜான் ரிபாட் ஆகியோர், உலக ஆயர்கள் மாமன்றத்தில், தலைவர் பிரதிநிதிகளாகவும், லெபனானிலிருந்து நான்கு பேர், இந்தியாவிலிருந்து இருவர் மற்றும் பிலிப்பீன்சிலிருந்து ஒருவர் என, ஏழு பேர் உதவியாளர்களாகவும் கலந்துகொள்கின்றனர்.

பங்களாதேஷ், தாய்வான், கொரியா, பிலிப்பீன்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கஜகஸ்தான், லாவோஸ், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், புருனெய், மியான்மார், அரபு நாடுகள், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு திமோர், வியட்நாம் ஆகிய ஆசிய நாடுகளின் திருஅவைகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

கர்தினால் சார்லஸ் மாங் போ, கர்தினால் ஜான் ரிபாட், லாவோஸ் பிரதிநிதி, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் பிட்சபாலா, போன்றோரை திருத்தந்தையே நியமித்துள்ளார். மேலும், லெபனானிலிருந்து இரு அருள்பணியாளர்களை சிறப்பு செயலர்களாகவும் இந்த ஆயர்கள் மாமன்றத்திற்கு திருத்தந்தை நியமித்துள்ளார்.

Comments are closed.