நல்லவற்றை தொடர்ந்து செயலாற்றுவது எளிதல்ல

எப்போதும் நல்லவற்றை ஆற்றிக் கொண்டிருக்க, கடும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘எப்போதும் நன்மைகளை ஆற்ற நிறைய முயற்சிகள் தேவைப்படுகின்றன. புனிதத்திற்கான பாதை, சோம்பேறிகளுக்கு உரியது அல்ல’ என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், இத்திங்களன்று, திருப்பீடத்தில் அல்பேனிய அரசுத்தலைவர் Ilir Meta அவர்களையும், IOM எனப்படும் குடியேற்றதாரருக்கான அனைத்துலக நிறுவனத்தின் உயர் நிர்வாகி William Lacy Swing அவர்களையும், சிலே நாட்டின் சார்பாக, திருப்பீடத்தில் பணியாற்றும் தூதர் Octavio Errazuriz Guilisasti அவர்களையும், பிரான்ஸ் நாட்டின் Grenoble-Vienne மறைமாவட்ட மாணவர் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘தட்ப வெப்ப நிலை மாற்றப் பிரச்சனைகளை அனைத்துலக ஒத்துழைப்புடன் எதிர்நோக்குவோம், ஒவ்வொருவர் எடுக்கும் முடிவும் மற்றவர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது’ என உரைத்துள்ளார்

Comments are closed.