உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல.
நான் இரக்கம் நிறைந்தவராய் இருக்கும்போது, தந்தையின் உண்மையான குழந்தையாக இருக்கிறேன், ஏனெனில், தந்தை இரக்கம் நிறைந்தவராய் இருக்கிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக செப்டம்பர் 13, இவ்வியாழனன்று வெளியாயின.
லூக்கா நற்செய்தியில் “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” என்று கூறப்பட்டுள்ள சொற்களை மையப்படுத்தி, இவ்வியாழன் திருப்பலியில், திருத்தந்தை தன் மறையுரையில் கூறிய சொற்கள், அவரது டுவிட்டர் செய்தியாகவும் பதிவாகியுள்ளன.
2015ம் ஆண்டு டிசம்பர் முதல், 2016ம் ஆண்டு நவம்பர் முடிய, கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் விருது வாக்காக, “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல…” என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஆகஸ்ட் 12, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,685 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 78 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
Comments are closed.