சாவகச்சேரி பங்கு கத்தோலிக்க இளையோர்க்கான கருத்தரங்கும் ஒன்றுகூடலும்

ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி பங்கு கத்தோலிக்க இளையோர்க்கான கருத்தரங்கும் ஒன்றுகூடலும். நாவற்குழி அற்புத அன்னை ஆலயத்தில் காலை 10:00 மணிக்கு சாவகச்சேரி பங்குதந்தை அருட்திரு றெக்ஸ் சவுந்தரா அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் இளையோர் இக்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும் அவற்றை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பது பற்றியும் விளக்கினார் இந்நிகழ்வில் சாவகச்சேரி பங்கை சேர்ந்த 40கும் அதிகமான இளையோர் பங்குபற்றினார்கள்

Comments are closed.