இயேசுவுடனான அன்புறவு தூண்டும் நற்செயல்கள்

நற்செயல்களை ஆற்றுவதற்கு இயேசுவுடனான அன்புறவு உதவுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“நற்செய்தியின் நறுமணத்தை உள்ளடக்கிய நற்செயல்களை ஆற்ற இயலும் வகையில், இயேசுவுடனான அன்புறவில் நம்மை ஈடுபடுத்துவோம்” என தன் டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘கடவுள் ஒருநாளும் தன் அன்பில் பின்வாங்குவதில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் C9 எனப்படும் கர்தினால்கள் அவையின் கூட்டம், செப்டம்பர் 10, இத்திங்களன்று, வத்திக்கானில் துவங்கியுள்ளது.

Comments are closed.