பாவத்தால் உம்மைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்
ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச்செய்தேன்
உம்மை தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே
அநியாயம் செய்தேன் கடும்கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வை கேடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
உம்மை மறுதலித்தேன் பின்வாங்கி போனேன்
உம் வல்லமை இழந்தேனைய்யா
என்னை மன்னியும் தெய்வமே
Comments are closed.