80ஆவது அகவையில மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வர்
ன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருவும் முன்னாள் குருமுதல்வருமான ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் தமது 80ஆவது அகவையில் குருத்துவத்தின் 57ஆவது நிறைவு தினத்தைகொண்டாடினார்.
மன்னார் மறைமாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்னர் யாழ் மறைமாவட்டத்திலும் பிரிக்கப்பட்ட பின்னர் மன்னார் மறைமாவட்டத்திலும் சீரோடும் சிறப்போடும் பணியாற்றிய ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் 1938ஆம் ஆண்டு பிறந்தவர்.
அவர் 1961ஆம் ஆண்டு உறோமாபுரியில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் (1962 – 1965) உதவிப் பங்குத்தந்தையாகவும் உயிலங்குளத்தில் (1965 – 1967) பங்குத்தந்தையாகவும் பின்னர் முருங்கன் பங்குத்தந்தையாகவும் (1968 – 1970) யாழ் புனித மடுத்தீனார் குருமட அதிபராகவும் (1972 – 1976) பணியாற்றினார். 1976 – 1978 காலப்பகுதியில் உரோமாபுரியில் உயர் கல்வியை மேற்கொண்ட பின்னர் 1978 – 1981 காலப்பகுதியில் யாழ் அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையாக பணியாற்றியுள்ளார். 1981ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரரக பணியாற்றிய இவர் அதே பணியோடு மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் போரால பங்குத்தந்தையாகவும் (1981 – 1986) மறைமாவட்ட நிதி முகாமையாளராகவும் (1987 – 1989) மன்னார் மறைமாவட்ட சிறிய குருமட அதிபராகவும் (1989 – 1995) பின்னர் மீண்டும் மறைமாவட்ட நிதிமுகாமையாளராகவும் (1959 – 2007) பணியாற்றியுள்ளார். பின்னர் மன்னார் மறைமாவட்ட சிறிய குருமட அதிபராக (2007 – 2012) பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்;ளார். இவர் யாழ் புனித மடுத்தீனார் குருமட அதிபராக (1972 -1976) பணியாற்றிய காலம் புனித மடுத்தீனார் குருமட வரலாற்றில் பொற்காலம் என யாழ் மன்னார் மறைமாவட்டங்களில் பணியாற்றும் குருக்கள் தெரிவிக்கின்றனர்;
உண்மையின் எண்ணங்கள்
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குரு ஏ.சேவியர் குரூஸ் அடிகளார்
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருவானவரான ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் தமது 80ஆவது அகவையில் குருத்துவத்தின் 57ஆவது நிறைவு தினத்தை அன்று கொண்டாடினார் என்பது மகிழ்வானசெய்தியாகும்.
அவருக்கு யாழ் மன்னார் மறைமாவட்டங்கள் சார்பாக காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழ் அன்பு நெஞ்சங்;களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
முன்னர் யாழ் மறைமாவட்டத்தில் புனித மடுத்தீனார் குருமட அதிபராக (1972 -1976) பணியாற்றிய காலம் புனித மடுத்தீனார் குருமட வரலாற்றில் பொற்காலம் எனவும் அவரிடம் சிறப்பான பயிற்சியை பெற்றோம் எனவும் யாழ் மன்னார் மறைமாவட்டங்களில் பணியாற்றும் குருக்கள் தெரிவிக்கின்றனர்;. மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருவானவரான ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் தமது 80ஆவது அகவையில் அமைதியான ஓய்வு காலத்தை பெற இறை அருள் வேண்டுவோம்.
Comments are closed.