சிந்திக்க தித்திப்பான ஒரு பகிர்வு அன்புக்குரியவர்களே

ஆலய பலி பீடத்தில் வைப்பதற்காக அழகிய பூக்களைக் கொண்டு அழகாக அலங்கரித்து வைத்து, திருப்பலி முடிந்த உடனேயே அந்தப் பூக்களை எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று வைத்த பூக்களையே மீண்டும் மீண்டுமாக அலங்கரிப்போம்.

இது இறைவனை மகிமைப் படுத்த அன்று. மாறாக காண்போரை மகிழ்விக்கத் தான். அது போல பயபக்தியுடன் மன்றாட்டுக்களை வாசித்து விட்டு வெளியே வந்தவுடன் மன்றாட்டுக்களை மறந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுடன், இறைவனின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்கின்றவர்கள் ஆகின்றோம்.

இவ்வாறு நாம் சொல்கின்ற மன்றாட்டுக்களானது மேலே நாம் கூறியது போன்று, வெளிவேடத்திற்காக பலமுறை வைக்கப் படுகின்ற பூக்களைப் போலானது என்பதை நினைவில் கொண்டு ஞாயிறு திருப்பலியில் மனமாற்றம் பெற்றவர்களாக தவறாமல் கலந்து கொண்டு இறைவனை மகிமைப் படுத்துவோம்..

Comments are closed.