ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் திருத்தலத்தை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பாதயாத்திரை

இன்று காலை எமது பேராலயத்தில் காலை 05.15 மணிக்கு நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து ,மட்டு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் ஆரம்ப ஆசீர் செப வழிபாட்டுடன் பாதயாத்திரை ஆரம்பமானது ,மட்டக்களப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூக ஏற்பாட்டில் இப்பாதயாத்திரை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு காலை 11.00 மணியளவில் ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் திருத்தலத்தை வந்தடைந்தது .இப்பாதயாத்திரையில் பல்லாயிரக்கணக்காண இறைமக்கள் செங்கலடி மற்றும் வவுணதீவு பாதைகளூடாக பங்குபற்றியிருந்தார்கள் .

இன மத மொழி வேறுபாடின்றி ஆயித்தியமலை சதா சகாய அன்னையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் ,நன்றியின் வெளிப்பாடே இப்பாதை யாத்திரை 30 ஆண்டுகாலமாக நம்பிக்கையுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அன்டனி டிலீமா அவர்கள் இம்முறை மிகவும் சிறப்பாக திட்டமிட்டு இப்பெருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளார் .

Comments are closed.