கடவுளின் படைப்பு பாதுகாக்கப்பட அசிசியில் செபம்

சனிக்கிழமை முதல், வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும், படைப்பின் காலம் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் ஒன்றிப்பின் (CCEE) தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள் தலைமையிலான, கத்தோலிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம் உட்பட, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, அசிசி நகரில், இவ்வெள்ளியன்று, இயற்கையைப் பாதுகாப்பதற்கென, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப நிகழ்வு தொடங்கியுள்ளது.
“COP24ஐ நோக்கி ஒன்றிணைந்து நடப்போம்” என்ற தலைப்பில் நடைபெறும் இச்செப நிகழ்வு, வருகிற டிசம்பரில், போலந்து நாட்டின் Katowice நகரில், காலநிலை மாற்றம் குறித்து, ஐ.நா. நிறுவனம் நடத்துகின்ற 24வது அமர்வை மையப்படுத்தி இடம்பெறுகின்றது.
செப்டம்பர் 1, இச்சனிக்கிழமை, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

Comments are closed.