5 வறுமை கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், இருவருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த 20000.00

வவுனியா தோணிக்கல்லை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இளைஞன் கருணாநிதி பிரகாஸன் என்பவர் தனது திருமண நிகழ்வை முன்னிட்டு (26.08.2018) 5 வறுமை கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், இருவருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த 20,000.00 ரூபாவும் வழங்கி வைத்திருந்தார்.

அவர்களின் இவ் உதவிகளை தம்பதிகளுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்,நகரசபை தலைவர் தேசபந்து இ.கெளதமன் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

Comments are closed.