திருப்பலியில் கட்டாயமாக பின்பற்றவேண்டிய ஒழுங்கு முறைகள்

அன்பு கத்தோலிக்க நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்:

திருப்பலி நூல் மாற்றத்தை தொடர்ந்து திருப்பலியில் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குமுறைகளும் தவிர்க்க வேண்டிய செயல்களும் எனத் திரு அவையின் ஒப்புதலுடன்

இந்த ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்கவில்லையெனில் அத்திருப்பலி முழுமையான பலனுள்ள திருப்பலி ஆகாது. ஆதாவது பலனளிக்காத திருப்பலியாகும்.

1. பலிபீடம் – கல்வாரி பலியை நம் கண் முன் கொண்டுவந்து திருப்பணியாளருடன் இணைந்து நாமும் இயேசுவின் உன்னதப் பரிசுத்த இரத்தப்பலியை மீண்டும் மீண்டும் இப்பலிபீடத்தில் இருந்து சம்மனசுகள், இறைவனின் தூதர்கள், அனைத்துப் புனிதர்கள் (மாதா உள்பட) புடைசூழ தந்தையாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

எனவே:

? திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கின்றவர்கள் திருப்பலி தொடங்கும் முன்னர் ஆலயத்திற்கு வந்து தங்களையே தயாரிக்க வேண்டும். திருப்பலி ஆரம்பித்தபின் வருவது தவிற்கப்பட வேண்டும்.

? பலிபீடத்தில் பூக்களோ வேறு எந்தப் பொருளும் இடம் பெறக்கூடாது.

? இயற்கையான பூக்களைத் தான் பீடத்துக்குப் பக்கவாட்டில் வைக்க வேண்டும். அதுவும் அளவோடு தான் இருக்கவேண்டும்.

? சேலைகளால் அலங்காரப்படுத்துதல் தவிர்க்க வேண்டும். பீடத்துக்கு முன்பு எந்தவோரு சுரூபங்களையும் வைக்கக் கூடாது.

? பீட அலங்காரம் பீடத்தின் மாண்பை குறைப்பதாக இருக்கக் கூடாது.

? திருப்பலியின் தொடக்கச் சடங்குகளும், இறுதிச் சடங்குகளும் திருப்பணியாளரின் இருக்கையில் இருந்தோ அல்லது அதற்கு என்று ஏற்படுத்தப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து தான் நடத்தப்படவேண்டும்.

? முதல் வாசகம் முதல் விசுவாசிகள் மான்றாட்டுகள் வரை (நற்செய்தி வாசகம், மறையுறை உள்பட) வாசக மேடையில் இருந்தே நடத்தப்பட வேண்டும்.

? காணிக்கை முதல் திருவிருந்து இறுதி மன்றாட்டு வரை பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.

? பலிபீட முற்றத்தில் (Altar) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணியாளர்கள் பீடச்சிறார்கள், திருத்தொண்டர், உபதேசியார் தவிர மற்றவர்களின் இருப்பைத் தவிர்த்தல் நலம். சிறு குழந்தைகள் உட்பட மற்றவர்கள் பலிபீடத்துக்கு முன்பு தான் இருக்க வேண்டும். ஒளி – ஒலி அமைப்புகள் Altar ல் இருந்தால் வேறு இடத்துக்கு மாற்றப்படவேண்டும். பாடுபட்ட சிலுவை மற்றும் நற்கருணை பேழை மட்டுமே (Projector screen உட்பட இருக்கக் கூடாது) இருக்க வேண்டும்.

? இறைமக்களின் கவனம் பலிபீடத்தின் மீதும் பலி ஒப்புக் கொடுக்கும் திருப்பணியாளர் மீதும் மட்டுமே இருக்கவேண்டும்.

? பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணியாளர் முழு மனதுடன் இறைமகன் இயேசுவுடன் ஒன்றித்து இறைமக்களுடன் இணைந்து இயேசுவின் இரத்தப் பலியை ஒப்புக் கொடுக்க வேண்டும். திருப்பாடல் குழுவினரையோ சிறு குழந்தைகள் / இறைமக்களையோ ஒழுங்குபடுத்தவோ / வழி நடத்தவோ முயற்சித்தல் கூடாது. திருபாடல் குழுவினரை வழி நடத்த விரும்பினால் அக்குழுவினருடன் இணைந்து அதற்குறிய இடத்தில் இருந்து முயற்சிக்கலாம்.

? திருப்பலி நூலில் உள்ள வார்த்தைகளை மட்டுமே திருப்பணியாளர் மற்றும் இறைமக்கள் பயன்படுத்த வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ கூடாது.

? திருப்பலி எந்தவோரு காரணத்துக்கும் இடையில் நிறுத்தப்படக்கூடாது. தொடக்கச் சடங்குகள் தொடங்கிப் பாவமன்னிப்பு மன்றாட்டு, இறைவாக்கு பகுதி, காணிக்கை மன்றாட்டு, நற்கருணை மன்றாட்டு, திருவிருந்து பகுதி, நிறைவு பகுதி எனத் தொடர்ந்து எந்த ஒரு தடங்கலும் இன்றித் திருப்பலி அனைவரும் இணைந்து ஒப்புக் கொடுக்க வேண்டும்.

? திருப்பலியின் நடுவில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படுதல் கூடாது.

? திருப்பலியின் நடுவில் ஒலி-ஒளி காட்சிகள் இடம்பெறுவது கூடாது.

? திருப்பணியாளர்கள் தங்களுக்குள்ளேயோ அல்லது மற்றவர்களுடனோ பலிபீடத்தில் ஆலோசித்தல் / பேசிக் கொண்டு இருப்பது கூடவே கூடாது. தகுந்த முன் தாயரிப்பை திருப்பலிக்கு முன்பே செய்வது நலம்.

2. வருகைபவணி:

? ஆலய முற்றத்தில் இருந்தோ அல்லது வேறு இடத்திலிருந்தோ இறைமக்களும் திருப்பணியாளரும் பவணியாக வரலாம்.

? பவணியின் இறுதியில் இறைமக்கள், திருப்பணியாளர் (திருவிவிலியம் உட்பட) அனைவருக்கும் சேர்த்து ஆரத்தி ஒரே முறை தான் எடுக்கப்பட வேண்டும். ஆயரோ அல்லது பலிசெலுத்தும் திருப்பணியாளரோ மக்களுக்கு இரண்டாம் முறை ஆரத்தி எடுப்பது தவிற்கப்படவேண்டும். ஆரத்தி எடுக்கும் பெண்கள் கலச்சார உடையில் (கவர்ச்சியைத் தவிர்த்து அடக்கமான உடையுடன்) இருப்பது ஆவசியம்.

? திருவிவிலிய பவணியோ அல்லது திருவிவிலியத்திற்கு அஞ்சலியோ தனியாகச் செய்தல் கூடாது.

3. காணிக்கை பவணி:

? காணிக்கையாகக் கொடுக்கப்படும் பொருள்கள் திருப்பலியில், ஆலயத்தில் பயன்படுத்த கூடியதாகவோ அல்லது எழைகளுக்கு உதவக்கூடியதாகவோ இருக்க வேண்டும்.

? அடையாளக் காணிக்கை கூடாது. அதுவும் விசுவாசிகள் மன்றாட்டுடன் சேர்த்து அடையாள காணிக்கை கொடுப்பதும் தவறு.

? காணிக்கை எழைகளுக்கு உதவக்கூடிய பொருள்களாக இருக்கும் பட்சத்தில் எழைகளுகளுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட வேண்டும். வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துவது கூடாது. அல்லது வீண் செய்யப்படக்கூடாது.

4. இறைவாக்கு பகுதி:

? முதல் வாசகம் முதல் விசுவாசிகள் மன்றாட்டு முடிய வாசக மேடையில் இருந்து மட்டுமே நடக்கவேண்டும்.

? அனைத்து வாசகங்களும் வாசக நூலில் இருந்து மட்டுமே வாசிக்கப்படவேண்டும். முதல் வாசகத்திற்குப் பின்பு வரக்கூடிய பதிலுரைப்பாடலும் இரண்டாம் வாசகத்திற்குப் பின்பு வரக்கூடிய அல்லேலூயா பாடலும் வாசக நூலில் உள்ளபடியே பாடவோ / வாசிக்கவோ வேண்டும்.

5. திரு இசை:

? அனைவரும் ஒருமித்து ஒன்றிப்புடன் திருப்பலி ஒப்புக் கொடுக்கத் திரு இசை பாடல் உதவியாக இருக்க வேண்டும். தேவையற்ற அதிகப்படியான சத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.

? ஆயர் பேரவை அல்லது அந்தந்த மறைமாவட்ட ஆயர் அனுமதிக்கப்பட்ட வழிவாட்டுப் பாடல்களை மட்டுமே பாடவேண்டும்.

? பதிவு செய்யப்பட்ட பாடல்களை (Recorded songs) இசைதட்டுகள் (CDs) / விரலி (PEN DRIVE) மூலம் இசைக்கக் கூடாது.

? புதிய பாடல் / தெரியாத பாடலாக இருப்பின் நன்கு பயிற்சி பெற்ற பின்பே பாடவேண்டும். இறைமக்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுப்பது வரவேற்கத்தக்கது.

? பாடல் குழுவில் உள்ளவர்களோ அல்லது திருப்பணியாளரோ தங்களது புலமையைக் காட்டும் விதமாக மிகச் சத்தமாகத் தனியாகக் குழுவினருடன் / இசையுடன் ஒட்டாமல் பாடுதல் கூடாது.

? திருப்பணியாளர் பலிபீடத்தில் இருந்தவாறு பாடல் குழுவினரை வழிநடத்தும் விதமாகப் பாடுதல் / சைகை செய்தல் கூடாது.

6. காணிக்கை மற்றும் நற்கருணை மன்றாட்டு:

? நற்கருணை மன்றாட்டுப் பகுதி திருப்பலி நூலில் உள்ளபடியே வாசிக்கப்படவோ / பாடவோ வேண்டும். ஒரு வார்த்தை கூடக் கூட்டவோ / குறைக்கவோ கூடாது.

? திருப்பலிக் கருத்துக்கள், பெயர்கள், திருப்பலி தொடங்கும் முன்னரோ அல்லது வருகைப் பாடலுக்குப் பின்பு தந்தை மகன் என்ற தொடக்க நிகழ்வுக்குப் பின்பு – மன்னி்ப்பு வழிபாடுக்கு உட்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அறிவிக்கலாம். நற்கருணை மன்றாட்டில் தவிற்க வேண்டும்.

? இறந்தவர்களுக்கான திருப்பலியில் இறந்தவர்களின் பெயர்கள் நற்கருணை மன்றாட்டில் ஒதுக்கபட்ட இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம்

? அஞ்சலிக்கு என்று தனியாகப் பாடல் பாடுவது கூடாது. இறைமக்கள் “ஆமென்” என்று சொன்னவுடன் நற்கருணை மன்றாட்டு பகுதி முடிவடைந்து விடுகிறது. எனவே திருப்பணியாளர் “இவரோடு இவரில்” என்று தொடங்கியதில் இருந்து இறைமக்கள் “ஆமென்” என்று சொல்லி முடிப்பதற்குள் அஞ்சலி எடுக்கப்படவேண்டும்.

? அஞ்சலி எடுக்கும் பெண்கள் கலச்சார முறைப்படியான உடையில் (அடக்கமான உடையுடன்) இருப்பதுடன், மண்டியிட்டவாறு அஞ்சலி எடுக்க வேண்டும்.

? அஞ்சலி எடுக்கும் போது பலிபீடத்தையோ திருப்பணியாளரையோ மறைப்பதாக இருக்கக் கூடாது.

7. திருவிருந்து பகுதி:

? இயேசு கற்றுகொடுத்த செபத்தில் இருந்து திருவிருந்துக்குப் பின்புள்ள நன்றி மன்றாட்டு வரையுள்ள பகுதியே திருவிருந்து.

? நற்கருணை வாங்க வரும்போது பக்த்தியோடும் தகுந்த ஆன்மீக தயாரிப்போடும்,. ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் மற்றவர் கவனம் சிதறாத வண்ணமும், மனம் தடுமறாத வண்ணமும் உடை உடுத்தவேண்டும்.

? திவ்விய நற்கருணையை வரிசையில் வந்து தலைகுணிந்து வணங்கி நாவிலோ அல்லது கையிலோ பய பக்தியுடன் தகுந்த முன் தாயரிப்புக்கு பின்பே வாங்கவேண்டும். (நாவில் வாங்குவதே காலங்காலமாகப் பழக்கத்தில் உள்ளது).

? கையில் வாங்குவோர் அதே இடத்திலேயே திருப்பணியாளர் முன்பே உட்கொள்ள வேண்டும். நற்கருணையைக் கையில் வாங்கித் திரும்பி நடந்து கொண்டோ / இடத்திற்கு எடுத்துச் சென்றோ உட் கொள்ளுதல் தவறு ஆகும்.

? திருப்பலி ஒப்புக் கொடுக்கும் திருப்பணியாளர்களைத் தவிர மற்ற குருவானவர், அருட்சகோதரிகள் உட்படத் திருத்தொண்டர், நற்கருணை பணியாளர் மற்றும் இறைமக்கள் என யாரும் நற்கருணை பாத்திரத்தில் இருந்து நேரிடையாக நற்கருணையை எடுத்து உட்கொள்ளக் கூடாது.

? திருவிருந்து முடிந்த பின்பு சிறிது நேரம் அமைதியுடன் செபித்த பின் இறுதி நன்றி மன்றாட்டு திருப்பணியாளர் செபிக்க வேண்டும்.

? திருவிருந்து முடிந்தவுடன் நன்றி மன்றாட்டுக்கு முன்பு அறிவிப்புகள் செய்யக் கூடாது. இந்த நேரம் நற்கருணை நாதருக்கு நன்றி சொல்லவே.

? இறுதி மன்றாட்டு முடிந்தவுடன் ஒலை வாசித்தல், அன்பிய நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், அந்த வாரத்தில் வரும் புனிதர்களின் நினைவு நாள், ஆலய நிகழ்வுகள் போன்ற 5 நிமிடங்களுக்கு மிகாமல் உள்ள எழுதப்பட்ட சிறு அறிவிப்புகளைத் திருத்தொண்டரோ / உபதேசியரோ அல்லது பங்கு தந்தையோ அறிவிக்கலாம். (2005 ஆண்டுத் தமிழக ஆயர் பேரவை வெளியிட்ட திருவழிப்பாட்டு ஒழுங்குமுறைகள் என்ற அறிக்கையில் தெளிவாக இது வழியுறுத்தப்பட்டுள்ளது. இப்போதும் இதுவே நடைமுறையில் தொடர்கிறது.)

? அறிவிப்புகள் அதிகமாக இருப்பின் அல்லது யாருக்காவது நன்றி / பாராட்டுத் தெரிவிப்பதாக இருப்பின் அல்லது பொன்னாடை போர்த்துவது அல்லது மற்ற எவ்வளவு பெரிய முக்கிய நிகழ்வாக இருப்பினும் கண்டிப்பாகத் திருப்பலி முடிந்தவுடன் ஆலய முற்றத்தில் அல்லது வேறு இடத்தில் நடத்த வேண்டும். திருப்பலி முடிந்த பின்பு கூடப் பலி பீடத்திலோ அல்லது பலி பீடத்துக்கு முன்போ நடத்த கூடாது.

8. திருப்பலியின் இறுதி பகுதி:

? திருப்பணியாளரின் இறுதி வாழ்த்துரைக்குப் பின்பு இறுதி ஆசியுரை மிக மிக முக்கியம். இறுதி ஆசியுரை இறை மகன் இயேசு கிறிஸ்துநாதரே திருப்பணியாளர் வழியாக வழங்குவதாகவே திரு அவை போதிப்பதால் இறைமக்கள் மற்ற திருப்பணியாளர்கள் உட்பட அனைவரும் சென்று வாருங்கள் என்று சொல்லும் வரை வெளியே செல்லக் கூடாது.

? திருப்பலி முடியும் முன்னரே வெளியேறுவது “இயேசுவின் இறுதி இரவு விருந்தில் இருந்து பாதியிலேயே யூதாஸ் ஸ்காரியத் வெளியேறியதற்கு” ஒப்பாகும்.

??? திவ்விய திருப்பலியை நமது குற்ற செய்கையால் தெரிந்தே செல்லாததாகச் செய்யும் போது அதற்கு மன்னிப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொண்டு இயேசுவின் இரத்த பலியில் பக்தி சிரத்தையுடன் தகுந்த முன் தாயரிப்புடன் பங்கேற்க முயற்சி செய்வோம்.

??? முழுமையான பலனுள்ள திவ்விய திருப்பலியில் பங்கேற்க நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. திருஅவை இயேசுவின் இரத்த பலியான திருப்பலியில் பங்கேற்க முழு உரிமையும் அளித்து இருக்கிறது. இந்த உரிமையில் ஏதேனும் குறைவுபடுமேயானால் திருஅவையிடம் முறையிட உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Comments are closed.