மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம்

மானிப்பாயில் சிறப்புற்று விளங்கும் கிறீஸ்தவ ஆலயங்களில் புனித அந்தோனியார் ஆலயம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்; வண.பிதா.ள.ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் பிறந்தவர். எனினும் இவரது கஸ்ரமான காலமோ என்னவோ தெரியவில்லை இவரது தந்தை ஞானப்பிரகாசர் சிறுவராக இருந்;தபோதே இறந்துவிட்டார். தந்தை இறந்ததனால் தாயார் இரண்டாம் திருமணமாக அச்சிவேலியில் ஒருவரை திருமணம் முடித்தார்.பிதா.ஞானப்;பிரகாசர் அவர் வாழ்ந்த காலத்தில் 36-37 கோயில்களை கட்டியவர். இருந்தும் இவர் தனது வாழ்க்கையை நல்லூர்ப்பங்கில் இருந்து கொண்டே செயல்பட்டார். இவர் சைவ மக்களை மனம்திருப்பி மறையைப்போதித்து வந்தபோது தான் பிறந்த ஊரில் ஒரு கோயில் கட்ட ஆசை கொண்டு தான் விரும்பியபடி மானிப்பாயில் சைவமக்கள் நிறைந்த இடத்தில் ஒரு ஆலயம் அல்ல சிறிய கொட்டிலை 1968ம் ஆண்டு அமைத்து அதிலே அந்தோனியாரின்; சுருபத்தை வைத்து வழிபட்டு ஒழுங்குகளை செய்து வந்தார் அதன் நீளம் 20அடி. இந்த கொட்டில் அமைக்க இடம் கொடுத்தவர் சிற்றம்பலம் கார்சனல் அவர்களாவார். ஓமர் வன்னியசிங்கம் என்பவரிடமிருந்து பிதா.ள.த.இமா னுவேல் பொறுப்பேற்றார் ஞானப்பிரகாசர் மானிப்பாயில் பிறந்தாலும் அவர் விசுவாசம் பெற்று வாழ்ந்தது அச்சுவேலியில்தான். இறுதியாக அவரின் ஆசைப்படி மானிப்பாய் வைத்தியசாலையில் இருந்து இறந்தார்.
இக்கோயிலுக்கு பங்குத்தந்தையாக இமானுவேல்; போக எண்ணி ஆயர்.வண.எமிலியான்ஸ்பிள்ளையிடம் அனுமதி பெற்று மானிப்பாய் அன்னம்மாள் கோயிலில் இருந்தார். இந்த நேரம் அந்தோனியார் கோயிலில் 12 குடும்பமே இருந்தது. ஞானப்பிரகாசர் தான் பிறந்த இடத்தில் உள்ள மக்களுக்கு நற்செய்திபோதிக்கப்பட்டு பரப்பப்பட வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இந்த ஆசையை இமானுவேல் அடிகள் திறம்பட ஆற்றினார். இவரது ஆசை ஞானப்பிரகாசரது காலத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பதே. இருந்தும் அது முடியாமல் போய் விட்டது. காரணம் கோயில் அமைக்கப்பட இருந்த இடத்தில் சூழவர உள்ள மக்கள் சைவர்களாக இருந்தார்கள். அருகில் அம்மன் கோயில் ஒன்றும் இருந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் கோயில் கட்ட இமானுவேலிடம் பணம் இல்லை. கொட்டிலின் பக்கத்தில் பழைய அத்திவாரம் இருந்தது. ஆனாலும் புதிய அத்திவாரம் இடவேண்டி இருந்தது. கோயிலில் உள்ள சொருபத்திற்கு மத்களால் கொடுக்கப்பட்ட நகைகளை விற்று 5000 ரூபாவிற்கு விற்றே அதைக்கொண்டு கோயிலைக் கட்டத்தொடங்கினார்.
பிதா. இமானுவேல் ஆண்டவனின் வார்த்தை போதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்கொண்டு செயற்பட்டார். இக்கோயில் கட்டுவதற்கு ஊக்கமளித்தவர்கள் ஜேம்ஸ்பத்திநாதர் மாஸ்ரர் அவர் தம்பாரியார் அன்னரத்தினம் போன்றோர் ஆகும். அனைவரும் உதவுவார்கள் என்று 500ரூபாவுடன் வேலையை தொடங்கினார். இக்கோயில்கட்டுவதற்கு தேவர் கட்டைச்சேர்ந்த மேசன் பெனடிக் என்பவரும் அவரது பிள்ளைகளும் உதவினார்கள். கோயிலின் முன் முற்றம் இன்மையால் முன் காணி சிறு காணி கொடுத்து வாங்கப்பட்டது. முன் மதிலை தேவசகாயம் என்பவர் தனது செலவில் கட்டினார். கோயில் வளவில் உள்ள மரங்கள் தறிக்கப்பட்டும் மிகுதி மரங்கள் விலைக்கும் வாங்கப்பட்டது.
போதிய பணம் இன்மையால் அந்தோனியாரிடம் வரும் பக்தர்களிடம் பட்டியல் போட்டு ஒவ்வொரு ஊராக பிரித்துக்கொடுத்து பணம் சேர்க்கப்பட்டது. கத்தோலிக்க சைவ மக்கள் உதவினார்கள். மானிப்பாய் படமாளிகையில் கோயில் கட்டட நிதிக்காக படக்காட்சியும் இடம் பெற்றது. ஆனைக்கேட்டை பண்டத்தரிப்பு தாவடி மல்லாகம் போன்ற அயல் கிராமங்களில் உள்ளவர்கள் சிரமதான வேலை மூலம் உதவி செய்தார்கள். பலர் தமது சொந்த பணத்தைகொடுத்து உதவி செய்தார்கள். கோயில் வேலை முடியும் தறுவாயில் இமானுவேல் அடிகள் மாற்றமாக கண்டி போக வேண்டிய தேவை ஏற்பட்டது. கோயில் கட்டச்சேர்ந்த பணம் 90000ரூபா. மொத்தசெலவு 72000ரூபா இமானுவேல் போகும் போது மீதி 18000ரூபா கோயிலில் இருப்பு பணமாக கொடுத்துவிட்டு சென்றார்.
1972ம் ஆண்டு ஆனிமாதம் குருக்கள் துறவிகள் கன்னிகள் மக்கள் புடைசூழ கோயில் நாடா வெட்டப்பட்டு ஆரவாரத்துடன் மக்கள் எல்லோரும் கோயில் உள்ளே சென்றனர். கோயில் திறந்து ஒரு மாதத்தில் இமானுவேல் அடிகளார் வேறு இடம் சென்றுவிட்டார்;. அந்த இடத்தில் கோயில் பிரதானமாக அமைக்கப்பட்டதன் நோக்கம் 40வீதம் சைவமக்கள் 10வீதம் மெதடிஸ்தர்கள் 50வீதம் கத்தோலிக்க மக்கள் எல்லா இடங்களிலும் இருந்தும் மக்கள் திருப்பலிக்காக வருவார்கள் விசேடமாக முதல் கடைசி செவ்வாய் கிழமைகளில் வருவார்கள். இமானுவேலின் முக்கிய நோக்கம் உரிய பாசையில் சைவமக்களும் விளங்கும்படி கிறீஸ்து கொண்டு வந்த நற்செய்தியை அதன் விழுமியங்களுடன் போதிக்க முயன்றார். மேலும் அந்தோனியார் புனிதர் என்றும் அவருக்கு மாலை போடுவதை நிறுத்தி மாலைகளை பீடத்தில் வைக்கும்படி கேட்டுக் கொண்டார். சைவமக்களும் கிறீஸ்துவின் உன்மையான சாராம்சத்தை உணர்த்தும் படியாக கோயில் அமைப்பு முறையும் ஆராதனையம் மாற்றப்பட்டன. கோயில் கட்டும்பொழுது குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று இடம் பெற்றது பக்கத்துகோயில் திருவிழாவில் வெள்ளிப்பாத்திரம் காணாமல் போனது. எனவே கோயில் முதலாளி அந்தோனியாரிடம் நேர்த்தி வைத்து அப்பொருள் சாக்குடன் இருக்க காணப்பட்டது. தற்பொழுது இவ் ஆலயம் மிகவும் சிறப்புற்று விளங்கு கின்றது.

Comments are closed.