அளம்பில் புனித அந்தோனியார் ஆலய இளையோர் ஒன்றியத்தின் வெளிக்களப் பயணம்
அளம்பில் புனித அந்தோனியார் ஆலய இளையோர் மன்ற உறுப்பினர்கள் பங்குத்தந்தை அருட் திரு M.L. தயாகரன், யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட் திரு அன்ரன் ஸ்ரிபன் ஆகியோருடன் இணைந்து திருகோணமலை மறை மாவட்டத்திற்கு வெளிக்களப் பயணம் ஒன்றை இம்மாதம் 11, 12ஆம்
திகதிகளில் மேற்கொண்டிருந்தார்கள். இவ்வெளிக்களப் பயணத்தில் திருகோணமலை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இடங்களைப் பார்வையிட்டு , கடலோர கலைநிகழ்வுகள், இரவுக்கருத்தரங்கு போன்றவற்றோடு பாலையூற்று பங்கு இளையோருடனான சந்திப்பினையும் மேற்கொண்டதுடன், அன்புவழிபுரம் புனித சதாசகாய மாதாவின் திருத்தல திருவிழா திருப்பலியில் பங்கேற்று திருகோணமலை மறைமாவட்ட ஆயார் வணக்கத்துக்குரிய மேதகு நோயல் இம்மானுவல் பெனான்டோ அவர்களின் சிறப்பான ஆசீரையும் பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் 40 ற்கும் அதிகமான இளையோர் பங்கு கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.