பெருவில் இயேசு சபை அருள்பணியாளர் கொலை

தென் அமெரிக்க நாடான பெருவில், அனைத்து விதமான வன்முறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக, அந்நாட்டு இயேசு சபை மாநிலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

73 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் Carlos Riudavets அவர்களின் உடல், Bagua மாநிலத்தின் “Valentín Salegui” என்ற இயேசு சபை கல்லூரி இல்லத்தில், ஆகஸ்ட் 10, இவ்வெள்ளியன்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட இயேசு சபை மாநிலம், வன்முறைக்கெதிரான தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

அருள்பணியாளர் Riudavets அவர்கள், Bagua மாநிலத்தில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்றும், அவரது உடல் வன்முறைகளால் நிறைந்து காணப்பட்டது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது

Comments are closed.