ஆன்மாவோடு மட்டும் தொடர்புடையதல்ல புனிதத்துவம்
மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளையொட்டி, மனிதர்கள் மனிதர்களாகவே நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதர்கள் விற்பனைப் பொருளாக கடத்தப்படுவதற்கு எதிரான உலக நாள் இத்திங்களன்று கடைபிக்கப்பட்டதையொட்டி டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, சுரண்டப்படும் நம்முடைய சகோதர சகோதரிகளின் அழுகுரலுக்கு செவிமடுப்போம். அவர்கள் வணிகப் பொருளல்ல. அவர்கள் மனிதர்கள். மனிதர்களாகவே அவர்கள் நடத்தப்பட வேண்டும்’, என அதில் எழுதியுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஞாயிறு டுவிட்டர் செய்தியில், ‘புனிதத்தன்மை என்பது ஆன்மாவோடு மட்டும் தொடர்புடையதல்ல, நம் சகோதரர், சகோதரிகளை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் கால்களோடும், அந்த சகோதரர், சகோதரிகளுக்கு உதவ நம்மை அனுமதிக்கும் கைகளோடும் தொடர்புடையது’ என கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்
Comments are closed.