கத்தோலிக்கரின் நிதி திரட்டும் முயற்சியில் முஸ்லிம்கள்
இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் கத்தோலிக்க ஆலயங்கள் கட்டுவதற்கென நிதி திரட்டும் பிறரன்பு நடவடிக்கை ஒன்றில், முஸ்லிம்களும் இணைந்து செயலாற்றுகின்றனர் என்று யூக்கா செய்தி கூறுகிறது.
ஜூலை 29, இஞ்ஞாயிறன்று Run4U என்ற தலைப்பில் நடத்தப்பட்ட 2.5 கிலோ மீட்டர் தூர நடைப்பயணத்தில், ஏராளமான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ மாணவர்கள், கத்தோலிக்க இளையோர் உட்பட பிற சமயத்தவரும் கலந்துகொண்டனர்.
மேலும், Banten மாநிலத்தின் Tangerangல் நடத்தப்பட்ட 5 கிலோ மீட்டர் தூர நடைப்பயணத்தில், ஏராளமான கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் பங்குபெற்றனர்.
இன்னும், இந்தோனேசியாவின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான Lombok தீவில் ஜூலை 29, இஞ்ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செய்வதில், கத்தோலிக்க குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலநடுக்கத்தில், குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், 355 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும், 5,100க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்
Comments are closed.