ஓய்வை விட பிறர் மீது கொள்ளும் அக்கறை முதலிடம் பெறட்டும்

திருப்பலி வாசகம் குறித்து நண்பகல் மூவேளை செப உரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட நம்மிடமிருந்து பல தியாகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று கூறினார்.

பணி முடிந்து திரும்பிய சீடர்களுக்கு ஓய்வளிக்க விரும்பிய இயேசு, அதை நிறைவேற்ற முடியாமல், மக்கள் கூட்டத்திற்கு போதிக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நிகழ்வுகள் நம் வாழ்விலும் இடம்பெறுகின்றன, ஏனெனில் நம் திட்டங்களைவிட, மற்றவர்களுக்கு நாம் உதவ வேண்டியது அவசரமானதும், அவசியமானதும் என்றார்.

நற்செய்தி அறிவித்தலில் மூன்று வினைச் சொற்கள் முக்கியத்துவம் நிறைந்தவை என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒரு மேய்ப்பரைப்போல் பார்ப்பது, இரக்கத்துடன் செயல்படுவது, கற்பிப்பது என்பனவற்றை எடுத்துரைத்தார்.

தன் சீடர்கள் ஓய்வெடுக்கச் செல்லும் நேரத்தில் தன்னைத் தேடிவந்த மக்கள் கூட்டத்தின் தேவைகளை அறிந்து, அவர்களை இதயத்தின் கண்கள் கொண்டு நோக்கிய இயேசு, அந்த மக்களுக்கு தான் வழங்கும் கொடையாக வார்த்தை எனும் அப்பத்தைத் தந்தார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.