வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயமான மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய  வருடாந்த திருவிழா பங்குதந்தை அருட்பணி இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது

.. 

இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான  ஆலய திருவிழா  எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது

இந்த விசேட கூட்டுத்  திருப்பலியினை   மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால்  ஒப்புகொடுக்கப்பட்டவுள்ளது

ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்று எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை  மாலை அன்னையின்  திருச்சொரூப பவனியும் விசேட நற்கருணை வழிபாடுகளுடன் திருப்பலியும் ஒப்புகொடுக்கப்படும்  

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்த திருவிழாவின் முதல் நவநாள் திருப்பலியினை “  படைப்பின் சிகரம் மனிதன் – அவன் மேல் படைத்தவரின் சமூக அக்கறை :”   எனும்  தலைப்பில்  அருட்பணி நிகஸ்ரன் பீற்றஸ் அடிகளாரின் தலைமையில் பங்கு மக்கள் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்

maddunews

Comments are closed.