கார்மல் அன்னையின் அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்

இத்திங்களன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழவையொட்டி, அந்த அன்னையின் அருளை வேண்டும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘கார்மேல் அன்னையும் அரசியுமான கன்னி மரியா, இறைவனின் மலையை நோக்கி நீங்கள் மேற்கொள்ளும் உங்கள் தினசரி பயணத்தில் உங்களோடு உடன்வருவாராக’  என தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நற்செய்தியை தினமும் வாசிக்கவேண்டிய கடமையை வலியுறுத்தி, ‘தினமும் நற்செய்தியை குறைந்தது ஐந்து நிமிடங்களாவது வாசிக்க முயலுங்கள். உங்கள் வாழ்வை அது எவ்வளவு தூரம் மாற்றியமைக்கிறது என்பதை பார்ப்பீர்கள்’ என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.