யாழ்ப்பாணம் மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தின் நெறிப்படுத்தலில் ஒழுங்கு செய்யப்பட்ட நாடக போட்டி

யாழ்ப்பாணம் மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தின் நெறிப்படுத்தலில் ஒழுங்கு செய்யப்பட்ட நாடக போட்டி, நேற்றைய தினம் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை கலை 10 மணியளவில் மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்டீபன் தலைமையில் இடம்பெறறது. இப்போட்டியில் இளவலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மறைகோட்ட பங்குகளிலிருந்து வருகைதந்த இளையோர்குழுக்களினால் ‘இறை திட்டம் தேடும் இளையோர் பயணம்’ என்ற மையகருவில் நாடகங்கள் ஆறுகை செய்யப்பட்டன. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைகோட்டத்தை சேர்ந்த கிறிஸ்து அரசர் ஆலய இளையோர் 3ஆம் இடத்தினையும், கிளிநொச்சி மறைகோட்டத்தை சேர்ந்த வலைப்பாடு புனித அன்னம்மா ஆலய இளையோர் 2 ஆம் இடத்தினையும், இளவாலை மறைகோட்டத்தை சேர்ந்த புனித யுதாததேயு ஆலய இளையோர் 1 ஆம் இடத்தினையும் பெற்றுகொண்டார்கள்.

Comments are closed.