மன்னாா் மடுமாதா சிறிய குருமடத்தின் அதிபராக அருடதிரு தமிழ்நேசன் அடிகளார் பொறுப்பேற்றார்.
மன்னாா் மடுமாதா சிறிய குருமடத்தின் அதிபராக அருடதிரு தமிழ்நேசன் அடிகளார் பொறுப்பேற்றார்.
கடந்த 29.06.2018 அன்று மன்னாா் மடுமாதா சிறிய குருமடத்தின் அதிபராக பொறுப்பேற்றார் .உதவி அதிபராக அருட்திரு. தயாளன் கூஞ்ஞ அவா்களும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்் . மன்னாா் மறைமாவட்ட ஆயா் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குருமடத்திற்கு வருகை தந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து நியமனக் கடிதத்தை வாசித்தாா். பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ‘விசுவாச வாக்குறுதி” யை (The Oath of Fidelity) ஆயா் முன்னிலையில் வழங்கிினார்கள். .
மாற்றலாகிச் செல்லும் முன்னாள் குருமட அதிபா் அருட்திரு. ஞானப்பிரகாசம் அடிகளாா் இந்தப் பணிப் பொறுப்பு ஏற்கும் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தாா். கடந்த மூன்று வருடங்களாக சிறிய குருமட அதிபராகச் சிறப்பாகப் பணியாற்றி தற்போது மன்னாா் புனித செபஸ்தியாா் பேராலயப் பங்குத்தந்தையாக பணிப்பொறுப்பை ஏற்றிருக்கும் ஞானப்பிரகாசம் அடிகளாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறி நிற்கின்றோம்்.
Comments are closed.