அருள்பணியாளர்களும் அவர்களது மேய்ப்புப்பணியும்

அருள்பணியாளர்கள், பல நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆற்றும்போது, விசுவாசிகள், தங்கள் அருள்பணியாளர்களை அன்பு கூர்கின்றார்கள், அவர்களுக்கு அவர்கள் தேவைப்படுகின்றார்கள், அவர்களில் விசுவாசிகள் நம்பிக்கை வைக்கின்றார்கள் என்பதை நினைப்பது, அருள்பணியாளர்களுக்கு நல்லது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை மாத செபக்கருத்து பற்றி காணொளியில் பேசியுள்ள திருத்தந்தை, அருள்பணியாளர்களின் சோர்வு பற்றி, நான் எவ்வளவு அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன் என்பதை அறிந்திருக்கின்றீர்களா? என்று கேட்டுள்ளார்.

அருள்பணியாளர்கள், தங்களின் புண்ணியங்கள் மற்றும் குறைகளோடு பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர் என்றும், அவர்கள், பல நடவடிக்கைகளை முன்னின்று ஆற்றுகையில், ஏமாற்றத்திற்குப்பின், அவர்கள் செயலற்று இருக்க இயலாது என்றும் திருத்தந்தை தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனவே, தங்கள் மேய்ப்புப்பணியில் சோர்வையும், தனிமையையும் அனுபவிக்கும் அருள்பணியாளர்கள், ஆண்டவருடனுள்ள நெருக்கத்திலும், சகோதர அருள்பணியாளர்களின் நட்பிலும், உதவியும் ஆறுதலும் பெறும்படியாக, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம் என, காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.