மருதமடுமாதா திருத்தலத் திருவிழா

வேதசாட்சிகளின் நிலமாம் மன்னார் மண்ணின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுமாதா திருத்தலத் திருவிழா இன்று 02.07.2018 திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 காலை 06.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில், கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி மக்ஸ்வெல் சில்வா, இலங்கையின் பல மறை மாவட்டங்களிலுமிருந்து வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் இணைந்து திருவிழாக் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இத் திருவிழாத் திருப்பலிக்கு பெருந்தொகையான திருப்பயணிகளும், நீதித்துறை சார்ந்த முக்கிய பணியாளர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் அரச கட்டமைப்பின் பல்வெறு பணிநிலை அதிகாரிகளும்,பிரதேச சபை உறுப்பினர்களும், முப்படையின் பிரதேச பணிநிலை அதிகாரிகளும்;,துறவிகளும் குருக்களும் கலந்து கொண்டனார்.

தமிழ்,சிங்களம், இலத்தீன் ஆகிய மும் மொழிகளிலும் நடைபெற்றது.தமிழ், இலத்தின் மொழிகளிலான வழிபாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், சிங்கள மொழியிலான வழிபாட்டை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி மக்ஸ்வெல் சில்வா அவர்களும் முன்னெடுத்துச் சென்றனர். திருவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும், திருப்பலின் தொடக்கத்தில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் வரவேற்றார்.

திருப்பலி முடிவில் ஆன்னையின் திருவுருவப் பவனியும், ஆசீரும் இடம் பெற்றது.

Comments are closed.