மானிப்பாய் அந்தோனியார் சொன்னது என்ன?
எத்தனையோ வருடங்களாய் பல கோடி மக்களின் தொடுகைகளையும், கண்ணீரையும், மன்றாட்டுகளையும்,அக்கிரமங்களையும்,அநியாயங்களையும் பார்த்து பார்த்து உள்வாங்கிய சுருவம் இரண்டு ஆயர்களின் கூட்டுத் திருப்பலி பவனியில் விழுந்து தன் தலையை துண்டாக்கி கொண்டார் என்பது சாதரண விஷயமாகிப் போனது….
காரைநகரில் சில மாதங்களுக்கு முன்னர் முருகன் ஆலயதேர் குடைசாய்ந்தது…
தான் யார் என்பதை உணர்ந்த மனிதன் கல்லை கடவுளாக பார்கின்றான்….
தான் யார் என்பதையே தேடிக் கொண்டிருப்பவன் கடவுளை
கல்லாக பார்கின்றான்….இவ்வளவு தான் வித்தியாசம்…..
விஷயத்திற்கு வருவோம்….
யாழ்பாணத்திலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் ஏதோ பொரிய அசம்பாவிதம் நடக்கப் போகின்றது……
மக்கள் குழப்பம் அடையாலாம் என்பதால் மதகுருமார் இதை பெரிது படுத்தாமல் விட்டிருக்கலாம்…..
இந்தியன் ஆமியிடம் சிக்கி சின்னாபின்னமாகி….
இலங்கை ராணுவத்திடம் சித்திரவதைப்பட்டு……
வீடிழந்து ,பொருளிழந்து,தாய் தந்தை சகோதரங்களை இழந்து, ……
இழப்பதற்க்கு எதுவுமே இல்லை என்ற நிலையில் தப்பி பிழைத்த கொஞ்சம் மனிதர்கள் இப்பொழுது தான் வாழ்க்கையை வாழ தொடங்கியிருக்கறார்கள்…..
இப்பொழுது ஆபத்து அந்நியர்கள் அல்ல நாம் பெற்று ரோட்டில் அலைய விட்டிருக்கும் நம் பிள்ளைகள் தான்…..
புலிகளை துரோகத்தால் வீழ்தியது போலவே தமிழ் இளைஞர்களையும் அதே துரோகம் சூழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறாரக்ள்….
என்பது இன்னமும் புரிய தொடங்கவில்லை……
இவையெல்லாம் சொல்ல காரணம் யாழ்பாணத்தின் நிலையை உணர்த்துவதற்காகவே……
அதர்மத்தின் அக்கிரமத்தின் அசிங்கத்தின் எல்லா வடிவமும் ஒன்று சேர்ந்து விட்டதால்…
பலர் எதிர் பார்கின்ற ஒரு விடிவு அல்லது ஒரு அழிவின் பின் விடிவு வரலாம்
அல்லது கொடுமையான ஒரு எச்சரிக்ககையாக இருக்கலாம்…..
இது மனிதம் வாழுகின்றது என்ற நோக்கத்தில் பதியப்பட்டது….மற்றவர்கள் வழமை போல் கேலி பண்ணலாம்.
எந்த சாராரையும் வேதனைக்கு உட்படுத்தும் நோக்கம் அல்ல,
சிந்திப்பதற்கு….
Comments are closed.