சர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி
அவதூறான பொய்ப்பிரச்சாரம், மக்களை அல்லது நிறுவனங்களை அழிப்பதற்கு இட்டுச்செல்லும் முதல்படி என்றும், யூதர்கள் கொல்லப்பட்ட ஆஷ்விஷ் வதைமுகாமில் முடிந்த, சர்வாதிகாரப் போக்கு கொண்ட பலரின் செயல்கள் இதற்குச் சான்று என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார்.
இத்திங்கள் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நாபோத் என்பவரின் உரிமைச் சொத்தான திராட்சைத் தோட்டத்தை, அரசன் ஆகாபு வாங்க விரும்பியது பற்றிச் சொல்லும் முதல் வாசகத்தின் (1அர.21,1-16) அடிப்படையில் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.
அரசன் ஆகாபு, அந்த திராட்சைத் தோட்டத்திற்குப் பணம் கொடுக்க முன்வந்தும், அது, தன் மூதாதையரின் உரிமைச் சொத்து என்பதால் அதை அளிக்க மறுத்தார் நாபோத், ஆனால், ஆகாபு, தனது கொடூரமான மனைவி ஈசபேலின் ஆலோசனையின்பேரில், நாபோத், பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டார், இறுதியில், அவரின் திராட்சைத் தோட்டமும் கவர்ந்துகொள்ளப்பட்டது.
நாபோத், தன் உரிமைச் சொத்துக்கு விசுவாசமாக இருந்ததால், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, நாபோத்தின் கதை, கொலைச்செய்யப்பட தீர்ப்பிடப்பட்ட இயேசு, புனித ஸ்தேவான் மற்றும் அனைத்து மறைசாட்சிகளின் கதைகளை ஒத்திருக்கின்றது என்று கூறினார்.
Comments are closed.