வயது முதிர்ந்தோரின் உரிமைகள் மீறப்படுவது குறித்த.

மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை வழியாக, விழிப்புணர்விலிருந்து செயல்திட்டத்திற்கு’ என்ற தலைப்பில், ஜூன் 15, இவ்வெள்ளியன்று, வயது முதிர்ந்தோரின் உரிமைகள் மீறப்படுவது குறித்த உலக விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

2015ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், இந்த வளர்ச்சி, வளர்ந்த நாடுகளில் அதிகமாக உள்ளது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

உலகில், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு எதிரான உரிமை மீறல்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஏற்கனவே இந்நிலையை உலகில் பரவலாகக் காண முடிகின்றது எனவும் ஐ.நா. கூறியுள்ளது.

நாடுகளில், தேசிய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, வயதானவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும், இதனால்  இலட்சக்கணக்கான வயதானவர்களின் உடல்நலமும், மனித உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன எனவும் தெரியவந்துள்ளது

Comments are closed.