உலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து

இவ்வியாழனன்று இரஷ்யாவில் துவங்கியுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்கும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘இன்று இரஷ்யாவில் துவங்கும் கால்பந்து போட்டிகளைப் பின்பற்றுவோருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த விளையாட்டு நிகழ்வு, நல் சந்திப்புகளுக்கும் தோழமைக்கும் உதவுவதாக’ என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும்தந்தை கிரில் அவர்களும், இரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் அவர்களும், இந்த உலக கால்பந்து போட்டி குறித்து தங்கள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.