நற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்

அறிவிப்பு, சேவை, கைம்மாறு கருதாமை ஆகிய மூன்றும், நற்செய்தி அறிவிப்பிற்கு மூன்று அடிப்படை கூறுகள் என, திருத்தூதர் பர்னபா விழாவான இத்திங்களன்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பர்னபா நினைவு நாள் திருப்பலியின் வாசகங்கள் (தி.ப.11:21-26;12:1-3,மத்.10:7-13), நற்செய்தி அறிவிப்பில், முதன்மையாளராக இருப்பவர் தூய ஆவியார் என்பதை விளக்குகின்றன என்று கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு, ஏனைய சமூகத்தொடர்புகள் போல் இல்லையெனவும், தூய ஆவியாரின் செயலால், அந்த அறிவிப்பு, இதயங்களை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, மேய்ப்புப்பணி திட்டங்கள் நிறைவானவையாகத் தெரிந்தாலும், அவை, இதயங்களை மாற்றுவதற்குத் திறனற்றவை, ஏனெனில், அவற்றின் முடிவு அவற்றிலே உள்ளன என்றும், அவை நற்செய்தி அறிவிப்பின் கருவிகள் இல்லையென்றும் கூறினார்

Comments are closed.