கீழே உள்ள பதிவு உங்களுக்கும் சிலநேரம் உதவியாக இருக்கும் அதனால் இதைப் பதிவிடுகிறேன்.
நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் இக் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள்.
நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
காலைச் சாப்பாடு – இலங்கை ரூபா 15,000.00
மதியச் சாப்பாடு – இலங்கை ரூபா 25,000.00
இரவுச் சாப்பாடு – இலங்கை ரூபா 15,000.00
பாரதி இல்லம் 100 சிறுவர்கள்
அன்பு இல்லம்: 30 சிறுவர்கள்
செஞ்சோலை 200 சிறுவர்கள். (ஆண் மற்றும் பெண்)
பாரதி இல்லம்
Bharathi Illam
Putharkuda
4th Ward
Mulliyavalai
Mullaitivu
Sri Lanka
———————————————————————-
செஞ்சோலை
Sencholai Children’s Care Home
4, 5 Stage 2
Thiruvaiyaru
Kilinochi
Sri Lanka
———————————————————————–
அன்பு இல்லம்
Anpu Illam Children’s Home
Muthuvinayagapuram
Oddisuddan
Mullaitivu
Sri Lanka
குறிப்பு: இந்த இல்லங்கள் தவிர இன்னும் தம் தாய், தந்தை உள்ளிட்ட உறவுகளை இறுதிப் போரில் இழந்து விட்ட ஏராளம் குழந்தைகள் வேறு இல்லங்களிலும் உள்ளனர்.
வாய்ப்புக் கிடைப்பின் இது போன்ற இல்லங்களுக்கு நீங்கள் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும்.
வருடத்தின் ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை இந்த உறவுகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே நம் எல்லோர் விடயமும்.
Comments are closed.