கிறிஸ்தவ அமைச்சினால் மன்னார் மறைமாவட்டல் தெரிவு செய்யப்பட்ட பங்குகளுக்கு கட்டிடப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதி

கிறிஸ்தவ அமைச்சினால் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட காத்தான் குளம் பங்கின், பாலையடிப் புதுக்குளம் தூய அந்தோனியார் ஆலயம், மன்னார் தூய பேராலப் பங்கின் தூய மரியன்னை ஆலயம், எழுத்தூர்ப் பங்கு தூய மரியன்னை ஆலயம் ஆகியவற்றின் கட்டிடப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியினை 11.04.2018 புதன் கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை ஆகியோர் குறிப்பிட்ட ஆலயங்களின் பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

இதன்போது காத்தான் குளம் பங்குத் தந்தை அருட்பணி அமல்றாஜ் குரூஸ் மற்றும் பாலையடிப் புதுக்குளம் தூய அந்தோனியார் ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்கள், மன்னார் தூய பேராலப் பங்கின் உதவிப் பங்குத் தந்தை அருட்பணி.மரிய கிளைன் மற்றும் அருட்பணிப் பேரவை உறுப்பினர்கள், எழுத்தூர்ப் பங்குத் தந்தை அருட்பணி.பி.யேசுறாஜா மற்றும் அருட்பணிப் பேரவை உறுப்பினர் சமூகமளித்திருந்தனர்.

Comments are closed.