புனிதர் கேத்தரின் ✠

பிறப்பு : கி.பி. 1331
ஸ்வீடன் (Sweden)

இறப்பு : மார்ச் 24, 1381
வாட்ஸ்டேனா, ஸ்வீடன்
(Vadstena, Sweden)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம் : 1484
திருத்தந்தை எட்டாம் இன்னொசென்ட்
(Pope Innocent VIII)

நினைவுத் திருநாள் : மார்ச் 24

பாதுகாவல் : கருக்கலைப்புக்கு எதிராக

ஸ்வீடன் நாட்டு புனிதரான கேத்தரினின் தந்தை பெயர் “உல்ஃப் குட்மர்ஸ்ஸன்” (Ulf Gudmarsson) மற்றும் அவரது தாய் பெயர் “புனிதர் பிர்ஜிட்டா” (St. Birgitta) ஆகும்.

கேத்தரின் தமது பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயதில் “கைரேன் நகர பிரபு இக்கேர்ட்” (Lord Eggert van Kyren) என்ற உயர்குடியைச் சேர்ந்த ஜெர்மன் நாட்டு இளம் வேத பற்றுள்ள இளைஞனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கற்புடன் வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர்.

1349ம் ஆண்டு, கேத்தரின் தமது தாய் பிரிஜெட்டுடன் ரோம் நகர் பயணப்பட்டார். ஆனால், அவர் ரோம் நகரை அடைந்தவுடன், தமது கணவர் இறந்து போனதாக செய்தியை அறிந்தார்.

இதனால், தமது தாயுடன் சேர்ந்து வாழ்ந்த கேத்தரின், தாயுடன் சேர்ந்து பல பயணங்கள் போனார். இப்படி, அவர் தம் தாயுடன் கிறிஸ்து பிறந்த புனித பூமிக்கும் சென்று வந்தார்.

தாய் பிரிஜெட் இறந்ததும், கேத்தரின் அவரது உடலுடன் ஸ்வீடன் திரும்பினார். “வட்ஸ்டேனா” நகரின் பெரிய மடத்தில் (Great monastery of Vadstena) தாயின் உடலை அடக்கம் செய்தார்.

கேத்தரின், அவரது தாயாரால் நிறுவப்பட்ட “வட்ஸ்டேனா” நகரின் மடத்திலுள்ள “பிரிஜிடைன் பள்ளியின்” (Brigittine Convent) தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

சில வருடங்களின் பிறகு, அவர் தமது தாயின் புனிதர் பட்டம் சம்பந்தமான பணிகளுக்காக ரோம் நகர் சென்றார். அங்கே ஐந்து வருடங்கள் தங்கியிருந்த கேத்தரின், அங்கே “புனித சியேன்னாவின் கேத்தரினுடன்” (Catherine of Siena) நெருங்கிய சிநேகிதமானார்.

Comments are closed.