அன்னையர் தினம் – வாழும் தெய்வம் தாயாரை வணங்குவோம்

பத்துமாதம் சுமந்தவளே ! பாசத்தால் நனைத்தவளே !
உத்தமியேமரமேறி கால் ஒடித்து
ரத்தம் ஒழுகி வர…..

விளையாட்டு போதையில் 
படிப்பு மட்டு பட்டு விட

வளர்ந்தபின் உழைப்பிலாமல்
ஊர் சுற்ற

தந்தை
அடிக்க வரும் போதெல்லாம்

திட்ட வரும் போதெல்லாம்

குறுக்கே விழுந்து
சில சமயங்களில் அடியையும்
பலசமயங்களில் வசவுகளையும்
சிரமேற்றி தான் வாங்கிக் கொண்டு

கோபம் முறைக்கும் என்னையும்
தலை கோதி சமாதாணப்படுத்தி

இணையா தளவாடங்களான
எங்களை
இணைக்கும் நடு பாலமாய் இருந்து

தன்னுயிர் காக்கிறாள்

தடுக்கி விழுந்த போது
அவளை நான் அழைக்கிறேன்

ஒரு கணம் ..கருப்பை துடித்து சுருங்க
என்னை அவள் நினைக்கிறாள்

பசித்த கண்கள் பார்த்து அமுதூட்டி

நெற்றி முத்தமிட்டு..நெஞ்சோடு அணைத்து
என்னை உற்சாகப்படுத்தி

தவறுகளோடு என்னை
எவரிடத்திலும் எப்போதும்
விட்டுக் கொடுக்காமல்
தட்டிக் கொடுத்து…..

மீசை முளைத்தாலும்
நரைத்தாலும்

இடுப்பு விட்டு இறக்காமல்
இறுதிவரை..பிள்ளையெனவே
எனை சுமக்கும்…தெய்வநேசம்

எல்லாஆண்மகனிலும் முதல் தோழி

Comments are closed.