இயேசுவுக்கு வழங்கும் பதிலுரை, நிரந்தர ‘ஆம்’ என்பதே

நாம் இயேசுவுக்கு வழங்கும் பதிலுரை, வாழ்நாள் முழுவதும் தொடரும் ‘ஆம்’ என்பதாக இருக்கவேண்டும் என, இச்சனிக்கிழமை, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘இயேசுவுக்கு நீங்கள் வழங்கும் பதிலுரை, தற்காலிக கணக்கீடுகளாலும், உங்கள் வசதி வாய்ப்புகளாலும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் தொடரும் ஆம் என்பதாக இருக்க வேண்டும்’ என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இச்சனிக்கிழமையன்று, திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால்  Marc Ouellet அவர்களையும், நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்களையும், கொலம்பியாவின் Pereira ஆயர் Rigoberto Corredor Bermlidez அவர்களையும் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அத்துடன், திருப்பீடத்திற்கான ஸ்லோவாக்கிய தூதராக பணியாற்றி, தன் பணியை நிறைவுசெய்து நாடு திரும்பும் Peter Sopko அவர்களையும் சந்தித்து தன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

Comments are closed.