மே 12, உலக செவிலியர் தினம்

உலகில் மருத்துவச் சிகிச்சைகளுக்கு, முதுகெலும்பாகவும், ஒருங்கிணைந்த அங்கமாகவும் செயல்படுகின்ற செவிலியர்களுக்கு தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது, MSF எனப்படும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு.

மே 12, இச்சனிக்கிழமையன்று உலக செவிலியர் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள MSF அமைப்பு, இந்த அமைப்பில் 72 நாடுகளில் பணியாற்றும் 8,843 செவிலியர்களும், எல்லா நேரங்களிலும் தரமான பணிகளை ஆற்றி வருகின்றனர் எனப் பாராட்டியுள்ளது.

MSF அமைப்பின் பணியாளர்களில், 90 விழுக்காட்டினர் செவிலியர் எனவும், இவர்கள் பணியாற்றும் நாடுகளில், பாகுபாடு பாராமல், நோயுற்றோரைப் பராமரிக்கின்றனர் எனவும் கூறியுள்ள இந்த அமைப்பு, இவ்வாண்டு செவிலியர் தினத்தில், தென்னாப்ரிக்காவில் MSF அமைப்பின் பல்வேறு திட்டங்களில் சிறப்பாய் பணியாற்றும் நான்கு செவிலியரைக் கவுரவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது

Comments are closed.