திருத்தந்தை, ருமேனிய பிரதமர் சந்திப்பு
ருமேனிய நாட்டு பிரதமர் Viorica Dăncilă அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார் என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.
இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறைச் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்தார், ருமேனிய பிரதமர் Dăncilă.
ருமேனிய நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் பொதுநலப் பணிகள், 2019ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியாவின் தலைமைத்துவம் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது
Comments are closed.