அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
(லூக்கா 23:44-46)
“கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்!.”
(மத்தேயு 27:52-53)
இங்கே இறந்தவர்களின் உடல்கள் திருநகருக்குள் பலருக்குத் தோன்றினார்கள்” என்பதற்குரிய காரண விளக்கம் என்ன?……………..
இன்று வத்திக்கான், சடலங்களை திருப்பண்டமாக வைத்திருப்பதையும், மரித்துப்போனவர்களிடம் வேண்டுதல் செய்வதை நடைமுறையில் கொண்டிருப்பதையும் நியாயப்படுத்த
இந்த கல்லறை திறப்பு நிகழ்வை பயன்படுத்துகின்றது!……..
உண்மையில் கல்லறைகள் திறக்கப்படக் காரணமென்ன?…………….
இயேசு மரித்தது பாஸ்காவுக்கு முதல்நாள்!… யூதர்களது பாஸ்கா பண்டிகைக்கு முதல்நாள் அவர் மரித்தார் -அதாவது பாஸ்கா ஆரம்பிக்கும் தருவாயில்!……
இங்கே கவனிக்க வேண்டியது எதுவெனில் பாஸ்கா பண்டிகைக்கு மக்கள் தங்களைப் பரிசுத்தப் படுத்தி, தீட்டானவைகளுக்கு விலகி, நியாயப்பிரமாண நியமங்களின்படி பாஸ்காவை ஆசரிக்க வேண்டும்!…
லூக்கா 23:54
“அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது;
ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.”
யோவான் 19:31
“அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.”
அதாவது பிரேதத்தை தொட்ட எவனும் தீட்டாயிருப்பான்! ………….
உபாகமம் 21:23
“இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம் பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக”
என்றிருக்கிறபடி,
வருகின்ற பாஸ்கா நாளிலும் மக்கள் தம்மை பிரேதங்களால் தீட்டுப்படுத்த விரும்ப மாட்டார்கள்!…..
கிறீஸ்து எமக்காக தானே சாபமாகி
சிலுவையில் தொங்கி மரித்ததானது, யூதர்களுக்கு “சபிக்கப்பட்டவர்” இயேசு என்ற தோற்றப்பாட்டை, நியாயப்பிரமாணத்தின் படியாக ஏற்படுத்தியிருந்தது!……
இப்போது எருசலேம் நகர் பாஸ்கா விழாவுக்குள் நுழையும் நேரம்!… கல்லறைகள் திறந்து பல இறந்துபோன பரிசுத்தவான்களின் உடல்கள் திருநகரில் பலருக்கு தோன்றின!…..
எதற்காக இவர்கள் எழுப்பப்பட்டார்கள்?………..
அவர்கள் கொண்டாடுகிற பாஸ்கா தீட்டுள்ளதாயிருக்கிறது என்பதை அவர்கள் அறியும்படியாகவே இவர்கள் கல்லறைகளிலிருந்து எழுப்பப்பட்டார்கள்!…
எழுப்பப்பட்ட அவர்கள் பின்பு என்ன ஆனார்கள்? ஊரில் லாசருவைப்போல வாழ்ந்தார்களா?… இல்லை!
மரித்தவர்கள் மறுபடியும்
காணப்பட்டதால் தாங்கள் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்!
தவிர தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது!… இதுவும் பழைய உடன்படிக்கை முடிந்துபோனதையும், அது இனி செல்லாது இயேசுவால் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் காண்பிக்கிறது!…
உங்கள் பாஸ்கா தீட்டானது என்பதையும், தேவன் அதை தள்ளிவிட்டார் என்பதையும் புரிவிப்பதற்காக அப்படியானது!………..
பாஸ்கா பலியாக கிறீஸ்து ஒப்புக்கொடுக்கப்பட்டதால் பாஸ்கா பலி இனிமேல் தேவையில்லை என்று நியாயப்பிரமாணத்தை முடிவுக்கு கொண்டுவந்த தேவன், அவர்கள் கண்டு திகைத்து புரிந்துகொள்ளத்தக்கதாக கல்லறைகளிலிருந்து மரித்தவர்களை எழுப்பி பாஸ்காவை செயலிழக்கச் செய்துவிட்டார்!….
அதனால்தான் பெந்தேகோஸ்தே நாளின்போது பேதுருவின் ஒரு பிரசங்கத்தால் எருசலேமில் பாஸ்காவுக்காக கூடிய இஸ்ரவேலரின் மூவாயிரம்பேர் ஞானஸ்நானம் பெற்று மனந்திரும்பினார்கள்!…..
இயேசுவை புறந்தள்ளி நியாயப்பிரமாணத்தில் நிலை நிற்பதால்தான் இஸ்ரவேலர் இன்றும் இரட்சிப்புக்கு தூரமாகியே இருக்கிறார்கள்!…
காரியங்கள் இப்படியாயிருக்க,
பரிசுத்தவான்கள் தோன்றினார்கள் என்று சத்தியத்தை புரிந்துகொள்ளாமல், செத்துப்போன பரிசுத்தவான்களின் கருகிப்போன சடலங்களை எடுத்து காண்பித்து, அதை புதுமைத்தன்மை கொண்டதாக நம்பப்பண்ணுகின்றது வத்திக்கான்!….
விவிலியத்தின் சத்தியங்கள்
சரியாகப் புரியப்பட்டிருக்குமானால், அப்போஸ்தலர்கள் இருந்தபோது சபை சத்தியத்துக்குள் பெருகியதுபோல, கத்தோலிக்க சபையும் சரியாகவே இருந்திருக்கும்!
மார்ட்டின் லூதரும் தேவையில்லை, மாறுபாடான சபைகளும் தேவையில்லை, மந்திரவாதப் போதகர்களும் தேவையில்லை,
மாய்மாலப் போதனைகளும் தேவையில்லை!…….
சபை தடம்மாறி மனிதர்களை புனிதர்களாக்கி, மண்ணுக்கும் கல்லுக்கும் மகத்துவம் கொடுத்து, மரபுகளை பேணி,
கோட்பாடுகளை வகுத்து தேவசபையென்ற தகுதியை இழந்தபோதுதான் விழித்துக்கொண்ட விசுவாசிகள் விவாதம் பண்ணியும், வேதகலாபனைகள் செய்தும் பிளவுற்று பிரிந்தார்கள்!
இதில் பல மில்லியன் மக்கள் இருதரப்பிலும் பலிகொள்ளப் பட்டார்கள்!….
மூலகாரணம் என்ன?….
விசுவாசத் துரோகம்!……..
இன்று விக்கிரக ஆராதனை தவறென்று சொல்லும் எத்தனையோ ஆவிக்குரிய பெயர்ச் சபைகள், பொருளாசை ஆகிய விக்கிரகத்தை சுமக்கமுடியாமல் சுமந்து தள்ளாடிக் கொண்டிருக்கின்றன!..
நூறு சபைகளில் ஆறு சபை தேவசித்தத்தை தொடர, மீதி எல்லாமே வேதத்துக்கு விரோதமானதை செய்து, தேவசபைக்குரிய தகுதியையிழந்து, சாத்தானின் வேலையை தாங்கள் பொறுப்பெடுத்து நடத்துகின்றன!….
வத்திக்கான் உடலங்களை காட்டுகிறது!… ஆவிக்குரிய லேபிள் சபைகளோ உயிரோடுள்ள சடலங்களாக தம்மையே காண்பித்துக்கொண்டிருக்கிறது!
இயேசுவுக்கு கிடைக்கவேண்டிய மகிமையும் கனமும் தங்களுக்கு கிடைக்கப்பண்ணி, துதிக்கிறோம் என்று துள்ளிக்குதித்து, ஆராதனைக் கூடங்களை ஆடிப்பாடும் கிளப்புக்களாக மாற்றுகின்றனர் மனநோயாளிப் போதகர்கள்!..
என்ன செய்வோம்?…….
எப்படி தப்பித்துக்கொள்வோம்?..
உடலங்களை வெறுத்துத்தள்ளி
உயிருள்ள தேவனிடத்தில் திரும்புவோம்!…
காலம் சமீபமாயிருக்கிறது!…
தேவ சமிக்ஞைகள் தெரியத்தொடங்கி விட்டது!
மாறுவோம் கிறீஸ்துவுக்குள்
மறுரூப மனிதர்களாய்!……..
“மாரநாதா”
(இயேசு சீக்கிரம் வருகிறார்!..)
Comments are closed.